செய்திகள் :

Rajinikanth: `ரஜினியும் ஜப்பான் ரசிகர்களும்!' - ஜப்பானில் வெளியாகும் ரஜினியின் ஜெயிலர்!

post image
கடந்த 2023-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியாகி அதிரடியான வெற்றியைப் பெற்றதோடு மாபெரும் வசூலையும் அள்ளியது `ஜெயிலர்'.

இந்த முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம். வழக்கம்போலவே அறிவிப்புக்கு இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் நடிப்பில் நகைச்சுவையான வடிவில் ஒரு ப்ரோமோவையும் வெளியிட்டிருந்தார்கள். இத்திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்கும் அதிரடியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரஜினிக்கு ஜப்பானிலும் அதிகளவிலான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 1998-ம் ஆண்டு ரஜினியின் `முத்து' திரைப்படம் ஜப்பானில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. 24 ஆண்டுகளுக்கு முன்பு `முத்து' திரைப்படம் செய்த வசூல் சாதனையை வேறு எந்த இந்திய திரைப்படத்தாலும் நெருங்க முடியவில்லை. அந்தளவுக்கு முத்துவாக ரஜினி ஜப்பான் மக்களிடையே பரிச்சயமாகிவிட்டார். சொல்லப்போனால், ரஜினியின் பெயரை பச்சைக்குத்திக் கொள்ளும் அளவுக்கு ரஜினியைக் கொண்டாடும் ரசிகர்கள் அங்கு இருக்கிறார்கள். `முத்து' படத்தைப்போல ரஜினியின் மற்ற சில திரைப்படங்களுக்கும் அங்கு அதிரடியான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

ஜெயிலர்

அந்த வரிசையில் `ஜெயிலர்' திரைப்படமும் வருகிற 21-ம் தேதி ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கெனவே அதிகளவிலான வசூலை ஈட்டிய `ஜெயிலர்' திரைப்படம் ஜப்பானில் வெளிவருவதன் மூலம் இன்னும் அதிகப்படியான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானில் `முத்து' திரைப்படத்தை தாண்டி எஸ்.எஸ். ராஜமெளலியின் `ஆர். ஆர். ஆர்', `பாகுபலி - 2' போன்ற திரைப்படங்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த `மகாராஜா' திரைப்படமும் ஜப்பானில் வெளியானது.

Dragon: "உங்களில் ஒருவனாக என்னை இங்கு நிற்க வைத்ததற்கு நன்றி..." - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கிற `டிராகன்' திரைப்படம் நேற்று (பிப்ரவரி 22) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.`லவ் டுடே' வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் ... மேலும் பார்க்க

`திராவிடர் கழகப் பெண்ணுக்கும், பாஜக ஐ.டி விங் பையனுக்குமான காதல் கதை அது!' - தியாகராஜன் குமாராராஜா

யுகபாரதி எழுதிய `மஹா பிடாரி' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலரும் பங்கேற்று உரையாற்றினர். நூல் வெளியீட்டு விழாவின் காணொளிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சினிமா விகடன்... மேலும் பார்க்க

Amaran 100 : `` `நல்லப் படம் இல்லைனு தெரிஞ்சும் பண்றியா'னு எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தை!" - கமல்ஹாசன்

கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நிரைப்படம் `அமரன்'. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு உருவான இத்திரைப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தி... மேலும் பார்க்க

Dragon Review: `ஃபயர் ஃபயரும்மா...' அட்டகாசமான திரையனுபவமாகிறதா இந்த `டிராகன்'?

தன் வாழ்க்கையின் நலனுக்காக எந்தத் தவற்றையும் செய்யத் துணியும் இளைஞன், அதன் விளைவுகளை உணரும் கமெர்ஷியல் பயணமே இந்த 'டிராகன்'.48 அரியர்களுடன் கல்லூரியில் கெத்தாகத் திரிந்த 'டி. ராகவன்' என்கிற 'டிராகன்' ... மேலும் பார்க்க

NEEK Review: இந்த நிலா வெளிச்சம் பாய்ச்சுகிறதா, மேகங்களிடையே மறைந்து ஏமாற்றுகிறதா?

காதல் தோல்வியால் திருமணம் செய்யாமலிருக்கும் பிரபுவை (பவிஷ் நாராயண்) கட்டாயப்படுத்தி பெண் பார்க்கக் கூட்டிச் செல்கிறார்கள் அவரது பெற்றோர். அங்கே சென்றால், அவனது பள்ளித் தோழி பிரீத்தி (ப்ரியா பிரகாஷ் வா... மேலும் பார்க்க