கல்வி விருது: 2-ம் கட்டமாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்!
Real Estate: வீட்டுக் கடன் வாங்க தகுதியானவரா நீங்கள்? தகுதி பெற என்னென்ன செய்ய வேண்டும்?
இப்போது பலரது சொந்த வீட்டுக் கனவை நனவாக்குவது 'வீட்டுக் கடன்' தான். ஆனால், இந்த வீட்டுக் கடன் ஒருவர் போய் வங்கியில் கேட்டதும் உடனே கிடைத்துவிடாது. அதற்கென சில தகுதிகள் தேவை. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க..
> வீட்டுக் கடன் வாங்குபவர்களின் வருமானம் மிக முக்கியமாக கவனிக்கப்படும். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு சம்பாதித்து இருக்கிறார்கள்... அடுத்த 10 ஆண்டுகளில் வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதைப் பொறுத்தே, கடன் தொகை மற்றும் இ.எம்.ஐ அமையும்.
> கடன் வாங்குபவரின் வருமானம் மாதத்திற்குக் குறைந்தபட்சம் ரூ.25,000 - 30,000 ஆக இருக்க வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடும்.

> வீட்டுக் கடனுக்கு முயற்சி செய்வதற்கு முன்பு, கிரெடிட் ஸ்கோரை கட்டாயம் செக் செய்ய வேண்டும். அது 700 - 750 புள்ளிகளுக்குள் இருந்தால் சிறப்பு. இதற்கு கீழ் இருக்கும் பட்சத்தில், கடன் கிடைப்பது கொஞ்சம் சிரமம். அப்படியே கிடைத்தாலும், வட்டித்தொகை அதிகமாக இருக்கலாம்.
> வீட்டுக் கடன் வாங்குபவர் கட்டாயம் வருமானம் உள்ளவராக இருக்க வேண்டும். அவரது வயது 21 - 65-க்குள் இருக்க வேண்டும். வீட்டுக் கடனைப் பொறுத்த வரை, வயது என்பது மிக மிக முக்கியம். காரணம், வீட்டுக் கடன் வாங்குபவர் அடுத்த 20 - 30 ஆண்டுகளுக்கு கடனைக் கட்டியாக வேண்டும். அதனால், அவரது வயது மற்றும் கடன் தொகை முக்கியமாக கணக்கில் எடுக்கப்படும்.
> சம்பளம் அல்லது வருமானத்திற்கேற்ப தான் கடன் தொகை கிடைக்கும். அதனால், எக்ஸ்ட்ரா வருமானம் எதாவது இருந்தால், அதை கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்திடம் காட்டுவது நல்லது. இது உங்கள் மேல் உள்ள நம்பகத்தன்மையையும்... அவர்கள் கொடுக்கும் கடன் தொகையையும் அதிகரிக்கும்.
> வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன், வேறு எதாவது கடன்கள் இருந்தால் முடிந்தளவு அதை அடைத்துவிடுங்கள். கடன் எதாவது இருக்கிறதா என்பதைக் கடன் கொடுப்பதற்கு முன்பு வங்கி அல்லது நிதி நிறுவனம் கவனிக்கும். கூடுதலாக, முன்னரே கடன்களை அடைப்பதன் மூலம், கடன் சுமையைக் குறைக்கலாமே.
> வீட்டுக் கடன் வாங்க வங்கி அல்லது நிதி நிறுவனத்தை அணுகுவதற்கு முன்பு, டவுன் பேமெண்டை ரெடி செய்துவிடுங்கள். குறைந்தபட்சம் 20 சதவிகித தொகையை கையில் வைத்திருப்பதன் மூலம், உங்கள் கடன் தொகை குறையும்... வங்கியும், நிதி நிறுவனமும் கடன் கொடுக்க இது ஒரு நல்ல பாயிண்ட்.
> நீங்கள் வாங்கும் வீடு, வங்கி அல்லது நிதி நிறுவனம் குறிப்பிட்டுள்ள கண்டிஷன்களுக்கு டிக் ஆகிறதா என்பதை பாருங்கள். வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்களுக்கு கடன் கொடுக்க முடிவு செய்ய இது ஒரு சூப்பர் பாயிண்ட்.
> வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் வீட்டில் சம்பாதிக்கும் இன்னொரு நபரின் பெயரும் விண்ணப்பத்தில் குறிப்பிடுங்கள். இது வங்கியின் நம்பகத்தன்மைக்கு கூடுதல் வலு சேர்க்கும்.