செய்திகள் :

Republic Day: முதல்முறையாக குடியரசு தினம் கொண்டாடும் இந்தியாவின் 12 கிராமங்கள்! - பின்னணி என்ன?

post image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 'நக்சலைட் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். அதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில், நக்சலைட், மாவோயிஸ்ட் நடமாடும் பகுதிகள் எனச் சந்தேகிக்கும் பகுதிகளில் கடுமையான சோதனைச் சாவடிகள், காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் செயல்பாட்டுக்கு வந்தது. அதன் அடிப்படையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர், நாராயண்பூர், சுக்மா உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் 14 பாதுகாப்புப் படையினரின் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டு, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் கண்காணிக்கப்பட்டனர்.

நக்சலைட் தேடுதல் வேட்டை

சமீபத்தில் பஸ்தர் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில், 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர். நக்சல்கள், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருப்பதாக அரசால் நம்பப்படும் கொண்டப்பள்ளி, ஜித்பள்ளி, வாடேவாகு, கரெங்கட்டா உள்ளிட்டப் பல்வேறு கிராம மக்கள் தேசியக் கொடி ஏற்றுவதையே பார்த்ததில்லை என்றும், குடியரசு தினம், சுதந்திர தினத்துக்கெல்லம் இந்தப் பகுதிகளில் கருப்புக் கொடிதான் ஏற்றப்படும் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், "இந்த ஆண்டு மாவோயிஸ்ட் கோட்டைகள் எனக் கருதப்பட்ட 12 கிராமங்களில், இந்த ஆண்டு குடியரசு தினம் கொண்டாடப்படும். முதல் முறையாக மூவர்ணக் கொடி ஏற்றப்படும் " எனக் காவல் துறை அதிகாரி (பஸ்டர் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் பி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``புதிய முகாம்களில், பத்து இடங்களில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மூன்று இடங்களில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஒன்றில் இந்தோ-திபெத்திய எல்லைப் போலீஸ் (ITBP) வீரர்கள் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது நக்சலைட்டுகளை பின்வாங்க வைத்திருக்கிறது.

இந்தியக் கொடி

அதனால், இனி இந்த கிராமங்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் 'நியாத் நெல்லனார்' (உங்கள் நல்ல கிராமம்) திட்டத்தின் மூலம் சென்றடையும் என நம்புகிறோம். கடந்த ஆண்டு முதல்முறையாக சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பிஜாப்பூர், சுக்மா, நாராயண்பூர், கான்கர் மாவட்டங்களில் இருக்கும் கிராமங்களைப் போன்று இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று மேலும் 12 கிராமங்களில் முதல் முறையாக குடியரசு தினம் மூவர்ணக்கொடியுடன் கொண்டாடப்படுகிறது" என்றார்.

US: ``கைகளில் விலங்கு; தண்ணீர், கழிவறைக்கு தடை" -கதறிய மக்கள்; டிரம்ப் செயலால் கொதிக்கும் பிரேசில்

'அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறி உள்ளவர்களை வெளியேற்றுவேன்' - இது தேர்தல் பிரசாரம் முதல் அதிபராகிய இப்போது வரை அமெரிக்க அதிபர் டிரம்பின் முக்கிய முழக்கமாக இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் த... மேலும் பார்க்க

Indonesia: ``எனக்கு இந்திய DNA இருக்கிறது; இந்திய இசையைக் கேட்டால் நடனம் வரும்" - இந்தோனேசிய அதிபர்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஞாயிற்றுக்கிழமை, குடியரசுத் தலைவர் மாளிகையில் திரௌபதி முர்மு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில், துண... மேலும் பார்க்க

Doctor Vikatan: தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் diabetes வருமா?

Doctor Vikatan:எனக்கு வயது 40. பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அதற்காக மூன்று மாதங்கள் தினமும் காலையில் வாழைப்பழம் சாப்பிட்டேன். அதன் பிறகு சுகர் டெஸ்ட் செய்தபோது எனக்கு ப்ரீ டயாபட்டீஸ் என்ற... மேலும் பார்க்க

Maha kumbh mela: ``மகா கும்பமேளா அனைத்து மதத்துக்குமானது..'' -யோகி ஆதித்யநாத் கூறுவதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13-ம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா பிப்ரவரி 26 வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரப்பி... மேலும் பார்க்க

``முன்னோடி, வழிகாட்டி... நாட்டின் முக்கிய மருத்துவர் கே.எம்.செரியன்'' -பிரதமர், முதல்வர் இரங்கல்..

50 ஆண்டுகளுக்கும் மேலாக இதய அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் கே.எம் செரியன். இவர் இந்தியாவின் முதல் இதய மாற்று சிகிச்சை உள்ளிட்ட பல சாதனைகளை செய்து உலகை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்கச் செய்தவர்... மேலும் பார்க்க

``சட்டமன்றத் தேர்தலில் எனக்கு ஆதரவு தாருங்கள்'' - அரிட்டாபட்டியில் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின்

டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்ததை தொடர்ந்து, மேலூர் மக்களின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வந்திருந்தார்.அரிட்டாபட்டி மக்கள்அரிட்டாபட்டி: `பல்லுயிர் பெருக்க தல... மேலும் பார்க்க