Retro: "என்னுடைய கண்ணாடிப் பூ ஜோவுக்கு நன்றி" - மேடையில் நெகிழ்ந்த சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ரெட்ரோ.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், ஸ்வாசிகா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (18.04.2025) சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா, "அன்பான ரசிகர்களுக்கு அன்பான வணக்கம். உங்களுடைய அன்பினால் மட்டுமே நான்" எனப் பேசத் தொடங்கினார்.

"ருக்மினியாக வந்ததற்கு நன்றி பூஜா"
"Retro என்பது நாம் கடந்து வந்த காலத்தைக் குறிப்பது. அந்த காலத்தை என்னால் மறக்கவே முடியாது.
ஷூட்டிங்கில் ஜெயராம் சார் முதல் பென்ச் மாணவர் மாதிரி ப்ராக்டிஸ் பண்ணுவாரு. நடிகர் விது இந்த படத்துல ரொம்ப கஷ்டப்பட்டான்.
4 மாசம் வேலை பார்த்தாலும் அத்தனை நடிகர்களும் சிரத்தைக் கொடுத்து உழைத்திருக்காங்க. ருக்மினியாக வந்ததற்கு நன்றி பூஜா.

ஒரு படம் உருவாகுவதற்க்கு ஒரு சகோதரதத்துவம் தேவையானது. 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனங்களோட லோகோ மியூசிக் போட்டது சந்தோஷ்தான். ரொம்ப நாளைக்குப் பிறகு இந்தப் பட ஆல்பம் ஹிட்னு சொல்லலாம்.
82 நாட்கள்ல படப்பிடிப்பு முடிஞ்சுடுச்சு. ஒவ்வொரு நாளையும் நான் என்ஜாய் பண்ணினேன்.
என்னுடைய கண்ணாடிப்பூ ஜோ
"கார்த்திக் சுப்புராஜ் ஐ.டி-ல இருந்து சினிமாவுக்கு வந்திருக்கார். இப்படி ரிஸ்க் எடுக்கலாம்... இந்த வாழ்க்கை அழகானது.

நான் இயங்குறதுக்கு முக்கிய காரணமே உங்களுடைய அன்புதான். இந்த அன்பு இருந்தால் எப்போதுமே நல்லா இருப்பேன்.
நான் நடிகன்-ங்கிற விஷயத்தைத் தாண்டி அகரம் அறக்கட்டளை தொடங்கி நடத்துறேன். இதுக்கெல்லாம் காரணமே நீங்கள்தான். உங்க அனைவருக்குமே பங்கு இருக்கு. என்னுடைய கண்ணாடி பூவான ஜோவுக்கு நன்றி சொல்லிக்கிறேன்" எனப் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...