செய்திகள் :

Retro: "சூர்யாவின் சூப்பர் ஃபர்பாமென்ஸ்; கடைசி 40 நிமிடங்கள்..." - ரெட்ரோ குறித்து ரஜினிகாந்த்

post image

நடிகர் சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள ரெட்ரோ படத்துக்கு பல தரப்புகளிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நடிகர் ரஜினிகாந்த் ரெட்ரோ திரைப்படம் பார்த்து வாழ்த்தியது குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

Retro

ரஜிகாந்த்தின் பேட்ட திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜின் 9வது திரைப்படம் ரெட்ரோ. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகியுள்ளன.

ரெட்ரோ திரைப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், "மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள்... சூர்யாவின் பர்ஃபாமென்ஸ் சூப்பர்... படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்தன. அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்" என வாழ்த்தியுள்ளார்.

ரஜினியின் வாழ்த்தைக் கேட்ட பிறகு தனது கால்கள் தரையிலேயே இல்லை எனக் கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். "நான் இப்போது பறப்பதுபோல உணர்கிறேன்... லவ் யூ தலைவா" என பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

STR: ``கமல் சார் நடித்துக் காட்டிய 7 பேர் காட்சி; மிரண்டு விட்டேன்"- பிரமித்த சிலம்பரசன்

மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த... மேலும் பார்க்க

'தேசிங்கு பெரியசாமியும் நானும் காலேஜ்மேட்ஸ்; அப்போவே அவரு...'- அண்ணாமலை பகிரும் சுவாரஸ்யம்

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இயக்குநர் தேசிங்கு பெரிய சாமியை உதாரணம் காட்டி மோட்டிவேஷனலாகப் பேசியிருக்கிறார். " காலேஜ் படிக்கும்போது எனக்கு ஒரு நண்பர் இருந்தார்.... மேலும் பார்க்க

Retro: 'ரெட்ரோ' படத்துக்கு 15 நாள் ரூம் போட்டு ரெடி ஆனேன்! - 'மைக்கேல் மிராஸ்' விது பேட்டி

மீண்டும் நடிகராக தன்னை நிரூபித்திருக்கிறார் நடிகர் விது. 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் ஷட்டானி கதாபாத்திரத்தில் நடித்து நமக்கு பிரமிப்பை ஏற்படுத்தியவர் இப்போது 'ரெட்ரோ' படத்தில் மைக்கேல் மிராஸாக க... மேலும் பார்க்க

DD Next Level: "சிம்பு சாராலதான் இன்னைக்கு இங்க இருக்கேன்; அவருக்காக எப்போவும் நிப்பேன்!" - சந்தானம்

சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.... மேலும் பார்க்க

DD Next Level: "இப்போ ஆக்‌ஷன் படங்கள்தான் அதிகமா வருது; சந்தானத்தை மிஸ் பண்றோம்!" - சிம்பு

சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.... மேலும் பார்க்க

DD Next Level: "சந்தானத்தோட பிரச்னை படத்தோட பட்ஜெட்விட பெருசுனு..." - ஆர்யா கலகல

சந்தானம் நடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சந்தானம் & கோவுடன், கெளதம் மேனன், செல்வராகவன் ஆகியோரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.... மேலும் பார்க்க