தமிழகத்தில் வலிமையான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி! - மத்திய இணை அமைச்சா் எல்.மு...
Retro: "லப்பர் பந்துக்கு பிறகு பெரிய மேடை கிடைச்சிருக்கு" - நெகிழ்ந்த ஸ்வாசிகா
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள லவ் x ஆக்ஷன் திரைப்படம் ரெட்ரோ.
பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஜெய்ராம், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடித்துள்ளார் லப்பர் பந்து படத்தில் பெயர் பெற்ற ஸ்வாசிகா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்து இசை வெளியீட்டுவிழா மேடையில் பேசிய ஸ்வாசிகா, "இவ்வளவு பெரிய மேடையில நிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சுருக்கு. லப்பர் பந்து படத்துக்குப் பிறகு நான் நடிச்சுருக்கிற திரைப்படம் இந்த ரெட்ரோ.
நான் கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு இதுக்கு முன்னாடியே ப்ரொபைல் அனுப்பியிருக்கேன். இப்போது லப்பர் பந்து படத்துக்குப் பிறகு அந்த வாய்ப்பு கிடைச்சுருக்கு." எனப் பேசினார்.

Retro
2டி எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹஃபீக் முகமது அலி படத்தொகுப்பில் பணியாற்றியுள்ளார்.
ரெட்ரோ படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் ஆகியிருக்கும் நிலையில், கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா இணைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.