செய்திகள் :

Robo Shankar: ``தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்'' - ரோபோ சங்கர் மறைவு குறித்து விஜய பிரபாகரன் வேதனை

post image

நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரோபோ சங்கரின் மறைவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகனும், தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.

ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விஜயபிரபாகரன்,

"ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது. நம்பவே முடியவில்லை. எப்போதும் எல்லோரையும் சிரிக்க வைப்பவர், இப்போது தமிழ்நாட்டையே அழவைத்துவிட்டார்.

கேப்டன் போல நடித்து காமெடி லெஜண்ட்டாக உருவானவர் ரோபோ சங்கர். அப்பாவின் மறைவிற்குப் பிறகு அடிக்கடி அவரின் நினைவிடத்திற்கு வந்து அன்னதானம் கொடுப்பார். எங்களுடன் சில விஷயங்களைப் பேசி செல்வார்.

இன்றைக்கு அவர் நம்முடன் இல்லாதது கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கிறது. ஒரு அண்ணனாகவோ, தம்பியாகவோ அவர்களுடைய குடும்பத்திற்கு நாங்கள் துணை நிற்போம். தயவுசெய்து எல்லோரும் அவரவர் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று வருத்தமாகப் பேசியிருக்கிறார்.

சத்தியராஜ்
சத்தியராஜ்

இதனைத்தொடர்ந்து பேசிய சத்யராஜ், "தம்பி ரோபோ சங்கரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், கலையுலகிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். 'சிங்கப்பூர்' சலூன் படத்தில் இருவரும் ஒன்றாக நடித்தோம். வயது வித்தியாசம் பார்க்காமல் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்.

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை தியேட்டரில் பார்த்து, கொண்டாடினோம். அவரின் இறப்பு வேதனையாக இருக்கிறது. 46 வயதுதான் ஆகிறது. அவருடைய குடும்பத்தார் அனைவரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள்" என்று நினைவலைகளைப் பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Robo Shankar: ``பேரனுக்கு மொட்டை அடிக்கப் போறேன், நீங்க கண்டிப்பாக வரணும்னு சொன்னார்!'' - எழில்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மறைவு திரையுலகை வருத்தமுறச் செய்திருக்கிறது. இத்தனை இளம் வயதில் அவரின் இழப்பு அத்தனை பேரையும் துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ரோபோவை `தீபாவளி' படத்தின் மூலம் அறிமுகப்படு... மேலும் பார்க்க

Genelia: "எல்லோரும் நம் Best Friends கிடையாது" - ஜெனிலியாவின் ஃப்ரண்ட்ஷிப் சீக்ரெட்!

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜெனிலியா, நட்பு வட்டம் குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார். நட்பு என்பது அனைவரையும் நம் சுற்றத்துக்குள் அனுமதிப்பது அல்ல எனக் கூறியுள்ளார்.... மேலும் பார்க்க

KPY Bala: ``எவ்வளவு வன்மம்; என்னை சர்வதேச கைகூலின்னு சொல்றாங்க!" - KPY பாலா காட்டம்!

KPY பாலா குறித்தான பேச்சுதான் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் நிரம்பியிருக்கிறது. சமீபத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்த ̀காந்தி கண்ணாடி' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது.Gandhi Kannadi ... மேலும் பார்க்க

Jana Nayagan: ``ஜனநாயகன் திரைப்படம் ஒரு கம்ப்ளீட் மீல்ஸ்!" - அப்டேட் கொடுத்த இயக்குநர் அ.வினோத்

விஜய் நடித்திருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் ரிலீசாக திரைக்கு வருகிறது. அ. வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல் ஆகியோரும் படத்தின் முக... மேலும் பார்க்க

Robo Shankar: கணவரின் இறுதி ஊர்வலத்தில் நடனமாடிய மனைவி; வளசரவாக்கத்தில் ரோபோ சங்கர் உடல் தகனம்!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று (செப்டம்பர் 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரின் மறைவுக்கு முதல்வர... மேலும் பார்க்க