செய்திகள் :

Sabarimala: உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலம்; பெல்லாரி நகைக்கடையில் மீட்கப்பட்ட சபரிமலை தங்கம்!

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் மற்றும் தங்க வாசல் செய்ததில் தங்கம் மோசடி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அது சம்பந்தமாக சிறப்பு விசாரணைக்குழு 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இந்த 2 வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களில் முதல் பெயராக உண்ணிகிருஷ்ணன் போற்றி பெயர் உள்ளது. சபரிமலை உபயதாரராக வலம் வந்த உண்ணிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் தங்க கவசங்களை செம்பு என ரெஜிஸ்டரில் பதிவுசெய்த சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு கைது செய்யப்பட்டுள்ளார். துவார பாலகர் தங்க கவசம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்திலும், தங்க வாசல் மோசடி வழக்கில் 6-வது இடத்திலும் முராரி பாபு பெயர் உள்ளது. இந்த நிலையில் சபரிமலை கோயிலில் உள்ள 476 கிராம் எடையுள்ள தங்கம் கர்நாடகா மநிலம் பெல்லாரியில் உள்ள கோவர்த்தன் என்பவரது நகைக்கடையில் விற்பனை செய்ததாக உண்ணிகிருஷ்ணன் போற்றி வாக்குமூலத்த்தில் தெரிவித்துள்ளார்.

உண்ணிகிருஷ்ணன் போற்றி

இதையடுத்து உண்ணிகிருஷ்ணன் போற்றியையும் அழைத்துக்கொண்டு நேற்று காலை பெல்லாரி சென்ற சிறப்பு விசாரணைக்குழு கோவர்த்தனின் நகைக்கடையில் இருந்து சுமார் 400 கிராம் தங்கக்கட்டிகளை மீட்டுள்ளது. நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தனை எஸ்.ஐ.டி விசாரணை நடத்தியது. அதில் சபரிமலை தங்கம் கொள்ளைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், தங்கத்தை வாங்க மட்டுமே செய்ததாகவும் கோவர்த்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவரும் விசாரணை வளையத்தில் உள்ளார்.

கைதுசெய்யப்பட்ட முராரிபாபு

சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எடையில் கோவர்த்தனின் நகைக்கடையில் இருந்து தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருவனந்தபுரத்தில் உள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றியின் வீட்டில் இருந்து தங்க நாணயங்களும், இரண்டு லட்சம் ரூபாயும் கண்டுபிடிக்கப்பட்டன. உண்ணிகிருஷ்ணன் போற்றியை வரும் 30-ம் தேதிவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்துவிட்டு, அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவேண்டும். எனவே அதற்குள் சபரிமலை தங்கம் கொள்ளை குறித்த கூடுதல் தகவல்களை அவரிடம் இருந்து வெளிக்கொண்டுவர சிறப்பு விசாரணைக்குழு முடிவு செய்துள்ளது.

அடகுவைத்த 8 கிலோ நகைகள் திருட்டு; வங்கி மேலாளர் உள்ளிட்ட இருவர் கைது - ஈரோட்டில் நடந்தது என்ன?

ஈரோடு முனிசிபல் காலனியில் ஈரோடு கூட்டுறவு நகர வங்கி பல ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகளை அடகு வைத்து உள்ளனர். இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி வங்கியின் தலை... மேலும் பார்க்க

ரூ.239 கோடி: `7 ஸ்டார் ரிசார்ட்டில் ஒரு மாதம் கொண்டாட்டம்’ - அபுதாபியில் லாட்டரி வென்ற கேரளா வாலிபர்

கேரளா மாநிலத்தை சேர்ந்த அனில் குமார் என்பவர் அபுதாபியில் வசித்து வருகிறார். அனில் குமார்(29), எதாவது அதிர்ஷ்டம் அடித்துவிடாதா என்ற நம்பிக்கையில் அடிக்கடி லாட்டரி சீட்டு எடுப்பது வழக்கம். அவ்வாறு அவர் ... மேலும் பார்க்க

வேலைக்கு போகாமல் மாதம் ரூ.1.6 லட்சம்; சம்பளமாக வந்த லஞ்சம்; அரசு அதிகாரியின் மனைவி சிக்கியது எப்படி?

ராஜஸ்தான் மாநிலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை இணை இயக்குநராக இருப்பவர் பிரத்யூமன் தீட்ஷித். இவரது மனைவி பூனம். தீட்ஷித் மனைவி இரண்டு ஆண்டுகள் இரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் செல்லாமல் சம்பளம் வாங்... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கரம்பயம், கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) ஐந்தாம் வகுப்ப... மேலும் பார்க்க

சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்... மேலும் பார்க்க

ஊட்டி: 1 ரூபாய் அம்மா உணவக இட்லி, ரூ.10-க்கு விற்பனை செய்யும் தனியார் ஹோட்டல் - அதிர்ச்சி பின்னணி

நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் தமிழ்நாடு அரசின் மலிவு விலை உணவக திட்டமான அம்மா உணவகங்கள் கடந்த 2013- ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. 1 ரூபாய்க்கு இட்லி, 5 ர... மேலும் பார்க்க