விடுப்பில் வந்து தலைமறைவான புழல் கைதி 6 மாதத்துக்கு பிறகு சூலூரில் கைது!
Samantha: "சென்னைதான் எனக்கு எல்லாத்தையும் கற்றுக் கொடுத்துச்சு..." - சமந்தா நெகிழ்ச்சி
'World Pickle Ball' எனும் லீகில் ஒரு பிக்கிள் பால் டீமை நடிகை சமந்தா வாங்கியிருக்கிறார். சென்னையை மையமாகக் கொண்டு, 'சென்னை சூப்பர் சாம்ப்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அணிக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உரிமையாளராக ஆகியிருக்கிறார்.
டேபிள் டென்னிஸையும் டென்னிஸையும் இணைத்ததைப் போல் ஆடப்படும் இந்த 'Pickle Ball' ஆட்டம் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது. பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் இந்த ஆட்டத்தை மாணவர்கள் ஆர்வமாக ஆட ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்த நிகழ்வில் சமந்தா பேசுகையில், ''ஒரு ஆறு மாதமாக இதற்காகத் திட்டமிட்டிருந்தோம். இன்றைக்கு இப்படியொரு நிகழ்வில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சி. ஒரு நடிகையாக நான் இங்கே வரவில்லை. ஒரு தொழில் முனைவராக இங்கே வந்திருக்கிறேன்.
நான் சென்னை பொண்ணு. ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும் ரொம்பவே சௌகரியமாக உணர்கிறேன். சென்னைதான் எனக்குப் பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. 'Never Ever Give Up' மனநிலையை சென்னைதான் எனக்குக் கொடுத்தது. 'Pickle Ball' ஆட்டத்தை நான் ஆடுகிறேன். எல்லாராலும் ஆட முடியும். சிறுவர்கள் முதல் பாலின பேதமின்றி எல்லாராலும் இந்த ஆட்டத்தை ஆட முடியும்.
உடல்நலத்துக்காகவும் மனநலத்துக்காகவும் எல்லாரும் கட்டாயம் விளையாட்டில் ஈடுபட்டே ஆக வேண்டும். இந்தியாவைப் பெருமையடைய செய்ய விளையாட்டை எல்லாருக்கும் கொண்டு சேர்க்க முதல் படியை இன்று எடுத்து வைக்கிறேன்.
உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்தியாவில் 50% க்கும் அதிகமான மக்கள் முறையான உடற்தகுதியுடன் இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது. அதை மாற்ற வேண்டும். எனக்குப் பெரிதாக விளையாட்டுகளின் மீது ஆர்வம் இருந்ததில்லை. படிப்பில்தான் கவனம் செலுத்தினேன். என்னுடைய நண்பர்கள் விளையாட கூப்பிடும்போது கூட அதை தவிர்த்துவிடுவேன். அப்படிப்பட்ட எனக்கே இந்த ஆட்டத்தின் மீது ஆர்வம் வந்துவிட்டது. என்னாலேயே இந்த ஆட்டத்தை ஆட முடிகிறது. அதனால் எல்லாராலும் இதை ஆட முடியும்.
நான் எதை செய்தாலும் பெரிய கனவோடும் பெரிய நம்பிக்கையோடும்தான் செய்வேன். அதனால் எதுவுமே எனக்கு வேலையாக தெரிந்ததில்லை. எல்லாவற்றையும் பெரும் ஆசையோடும் ஆர்வத்தோடுமே செய்து வருகிறேன்" என்று கூறினார்.
சென்னை சூப்பர் சாம்ப்ஸ் அணியின் ஜெர்ஸியையும் சமந்தா வெளியிட்டார். அதோடு மாணவ, மாணவிகளோடு இணைந்து ஒரு பிக்கிள் பால் ஆட்டத்தையும் ஆடினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...