செய்திகள் :

Santhosh Narayanan: `கண்ணாடி பூவே' இதுதான் நான் பண்ண விரும்பும் பாடல் - சந்தோஷ் நாராயணன்

post image
சூர்யாவின் 44வது படத்தை இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

ஒருபக்கம் 'சூர்யா 44' படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள், இன்னொரு பக்கம் ஆர்.ஜே.பாலாஜியின் 'சூர்யா 45'க்கான படப்பிடிப்பு பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் மும்முரமாகியிருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44 வது படமான ரெட்ரோவில்  பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ், சுஜித் சங்கர், நாசர், 'டாணாக்காரன்' தமிழ் எனப் பலரும் நடித்துள்ளனர். 

ரெட்ரோ

சந்தோஷ் நாரயணின் இசையில் 'love laughter war' என காதலும், கோபமுமாக இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் காதல் பாடலான 'கண்ணாடி பூவே..." வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

'கால் போகாதடி நீ விட்டாலுமே நான் உன்னோடு தான் தீ சுட்டாலுமே', உன் முகம் பாக்கும் நாளாச்சே வாழவே ஆசையாச்சே' என காதல் ஏக்கத்தை பாடலாசிரியர் விவேக் அற்புதமாகக் கடத்த, சந்தோஷ் நாராயணன் மனதைத் தொடும் இசையை பாடலெங்கும் பரவ விட்டிருப்பார். நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்தோஷ் நாராயண் மீண்டும் காதலில் களமிறங்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.

இப்பாடலுக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்புக் குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கும் சந்தோஷ் நாராயணன், " 'கண்ணாடி பூவே...' என் மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல். ஒருசில படங்களுக்கு மட்டுமே இதுபோன்ற நான் இசையமைக்க விரும்பும் பாடல் அமைக்கின்றன. நான் இசையமைக்க விரும்பும் இப்படியான பாடல்களுக்கு வரவேற்பு கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு கலைஞனுக்கு இதைவிடவும் வேறென்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகிறது. இன்னும் பல புதிய புதிய முயற்சிகளில் பாடலுக்கு இசையமைக்க இது ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

Shankar : இயக்குநர் ஷங்கரின் சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை - நடவடிக்கையின் பின்னணி என்ன?

2010ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடிப்பில் 'சன் பிக்சர்ஸ்' தயாரிப்பில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகி, அதிக வசூலையும் குவித்தப் படம் 'எந்திரன்'.இந்த 'எந்திரன்' திரைப... மேலும் பார்க்க

NEEK : `கண்ணில் கனவோடு காத்துட்டு இருக்காங்க; படம் ஜாலியாக இருக்கும்..' - இயக்குநர் தனுஷ் நெகிழ்ச்சி

நடிகர் தனுஷ், 'பவர் பாண்டி' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 'ராயன்' படத்தை இயக்கியிருந்தார்.தனது இயக்கத்தில் மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கி முடித்திருக்... மேலும் பார்க்க

`தனுஷ் சார் சொன்ன மாதிரி, ஜாலியா வாங்க ஜாலியா போங்க' - 'NEEK' படத்தை பாராட்டிய தமிழரசன் பச்சமுத்து

‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்த... மேலும் பார்க்க

Jyothika: "அழகூரில் பூத்தவளே..." - ஜோதிகாவின் ரீசன்ட் க்ளிக்ஸ் | Photo Album

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!https://tinyurl.com/Velpari-Vikatan-Play மேலும் பார்க்க

Hey Ram: சம்பளம் வாங்காத ஹீரோ; கருப்பு வெள்ளை குறியீடு... இந்த சுவாரஸ்ய தகவல்கள் தெரியுமா?

`ஹே ராம்' திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது.இன்று வரை காந்தியைப் பற்றிய பல சீரிஸ் மற்றும் திரைப்படம் எடுப்பவர்களுக்கு முதல் இன்ஸ்பிரேஷனே `ஹே ராம்' திரைப்படம்தான். ரஜினி தொடங்கி மண... மேலும் பார்க்க