செய்திகள் :

Sardaar 2 : மிரட்டலான லுக்; பிரமாண்ட செட்; தயாராகும் டீசர் - அடுத்த பட அறிவிப்பு

post image
'மெய்யழகன்' படத்திற்குப் பின் கார்த்தியின் கிராப் எதிர்பார்ப்பிற்குள்ளாகி விட்டது. 'சூது கவ்வும்' இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் 'வா வாத்தியார்', 'சர்தார்' பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் 'சர்தார் 2' ஆகிய படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
'சர்தார்'

இந்தாண்டின் பொங்கல் வெளியீடாக கார்த்தியின் 'வா வாத்தியார்' எதிர்பார்க்கப்பட்டது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரசிகராக கார்த்தி நடித்திருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், கீர்த்தி ஷெட்டி, ஆனந்தராஜ், ஷில்பா மஞ்சுநாத் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. சூர்யாவின் 'ரெட்ரோ' மே மாதம் முதல் தேதி வெளியாவதால், கார்த்தியின் படத்தை ஏப்ரலில் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.

கார்த்தி

கடந்த சில மாதங்களுக்கு முன்னரே 'வா வாத்தியார்' படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு 'சர்தார் 2'விற்குச் சென்றார் கார்த்தி. கார்த்தியின் நெருங்கிய நண்பரான பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்‌ஷ்மண் குமார் 'சார்தார்' முதல் பாகத்தைத் தயாரித்திருந்தார். இப்போது அவரே பார்ட் 2 வையும் தயாரித்து வருகிறார். கார்த்தி இதில் ஏஜென்ட் சர்தார் சந்திரபோஸ், விஜய் பிரகாஷ் என இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

ஆஷிகா

படத்தின் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா, கார்த்தியின் ஜோடிகளாக ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். இவர்கள் தவிர ரஜிஷா விஜயனும் படத்தில் இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

'வா வாத்தியார்', 'சர்தார் 2' இவை இரண்டிற்கும் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் தான் ஒளிப்பதிவு செய்து வருகிறார். 'சர்தார்' முதல் பாகத்திற்கும் இவர் தான் காமிராவை கவனித்தார். 'சர்தார் 2'வின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது. பிரமாண்டமான செட்கள் அமைத்து, படமாக்கி வருகின்றனர். 'சர்தார்' படத்தில் டபுள் ஆக்‌ஷன் கார்த்தியின் தோற்றம் பேசப்பட்டது போல, இதிலும் அசத்தலான லுக்குகள் இருக்கின்றன. இதுவரை 60 சதவிகித படப்பிடிப்பு நடந்திருக்கிறது என்கின்றனர். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக திண்டுக்கலில் நடைபெறும் என்றும், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் ஒரு பாடலை படமாக்க உள்ளனர் என்றும் சொல்கின்றனர்.

மாளவிகா

இதற்கிடையே கார்த்தியின் 29வது படமாக 'டாணாக்காரன்' தமிழ் படம் இயக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இது ஒரு பீரியட் ஃபிலிம். இயக்குநர் தமிழின் சொந்த ஊர் ராமேஸ்வரம் என்பதால், ராமேஸ்வரம் - இலங்கை கடற்பகுதியில் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதையாக இந்தப் படம் இருக்கக்கூடும் என்கிறார்கள். 'சர்தார் 2'வைவிட மிகுந்த பொருட்செலவில் இந்தப் படமும் இருக்கும் என்கின்றனர். படத்தில் கிராபிக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால், ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளும் தீவிரமாகி வருகின்றன. வரும் மே மாதத்தில் கார்த்தியின் பிறந்த நாள் வருகிறது. அன்று, இதன் படப்பிடிப்பு குறித்த அப்டேட்டும், 'சர்தார் 2' டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth: ``அங்கதான் கடைசி பெஞ்ச்சுக்கு போனேன்" - பள்ளி ரீ யூனியன் குதூகலமாக வாழ்த்திய ரஜினி

பெங்களூருவில் என்.ஆர். காலனி பகுதியில் பிரபலமான ஏ.பி.எஸ். என்கிற ஆச்சார்யா பாடசாலா கல்விக் குழுமத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி பள்ளி நிர்வாகம் பழைய மாணவர்... மேலும் பார்க்க

புது அவதாரத்தில்;மிர்ச்சி சிவா; யுவன் இல்லாமல் முதல் ராம் படம்!

சத்தம் காட்டாமல் இயக்குநர் ராம், ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார். 'பறந்து போ' என அதற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். Rotterdam film festivalலில் திரையிட அந்தப் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

Bigg Boss Rayan: `எனக்கான இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திகணும்னு நினைக்கிறேன்' - பட விழாவில் ரயான்

பிக் பாஸ் சீசன் 8 முடிந்துவிட்டது.பிக் பாஸ் பயணம் முடிந்த அடுத்த நாளே தன்னுடைய சினிமா வேலைகளை கவனிக்க தொடங்கிவிட்டார் `டாஸ்க் பீஸ்ட்' ரயான். `ஜம்ப் கட்ஸ்' ஹரி பாஸ்கர், லாஸ்லியா நடிப்பில் உருவாகியிருக்... மேலும் பார்க்க

Ajith: ``அடைந்தால் நல்ல விஷயம்; வெற்றி அடையாவிட்டாலும்... " - ரசிகர்கள் குறித்து அஜித்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியைத் தொடர்ந்து தற்போது நடிகர் அஜித்குமார் போர்ச்சுக்கலில் நடைபெற்று வரும் கார் ரேஸ் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் அஜித் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதள... மேலும் பார்க்க

Director Bala: ``வன்முறை என்பது எனது இரத்தத்தில் இருக்கிறது!'' - இயக்குநர் பாலா

அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் "வணங்கான்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தின் 'நன்றி தெரிவிக்கும் விழா நேற்றைய தினம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அருண்... மேலும் பார்க்க