செய்திகள் :

Sarfaraz Khan: "ஆஸி., இங்கிலாந்து பிட்ச்களில் சரியாக ஆடமாட்டார் என்று நினைக்கிறார்கள்"- புஜாரா

post image

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் ஜூன் 20-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது.

இதற்கான அணியை BCCI-யின் தேர்வுக்குழு நேற்று முன்தினம் (மே 24) வெளியிட்டது. அதில், இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும், புதிய துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

சாய் சுதர்சன், அர்ஷதீப் சிங் ஆகியோர் முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணி
இங்கிலாந்து செல்லும் இந்திய அணி

ஷர்துல் தாக்கூர் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டு உள்ளூர் போட்டிகள், நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி, நடப்பு ஐ.பி.எல் என தொடர்ச்சியாக ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் தேர்வுசெய்யப்படவில்லை.

அதேபோல், பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு போட்டியில்கூட ஆடவைக்கப்படாத சர்ஃபராஸ் கானும் டெஸ்ட் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டிருக்கிறார்.

Sarfaraz Khan | சர்ஃபராஸ் கான்
Sarfaraz Khan | சர்ஃபராஸ் கான்

இதனால், வருடக்கணக்கில் உள்ளூர் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டதால் நியூசிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பளித்து, அதில் சிறப்பாகச் செயல்பட்டதும் வெறுமனே பெயருக்கு பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அழைத்துச் சென்று அங்கு வாய்ப்பே கொடுக்காமல் பென்ச்சில் அமரவைத்துவிட்டு இப்போது அணியிலிருந்து கழற்றிவிட்டிருப்பது நியாயமே இல்லை எனத் தேர்வுக்குழுவைப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் சர்ஃபராஸ் கானை தேர்வு செய்யாதது குறித்து இந்திய வீரர் புஜாரா, "அணியில் அவர் தேர்வு செய்யப்படாததற்கான காரணம், அவர் இந்தியா அல்லது ஆசியா கண்டிஷன்களில் வெற்றிகரமாக இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ அவரால் அந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்க முடியாது என்று நிர்வாகம் நினைக்கிறது.

புஜாரா
புஜாரா

கடந்த காலங்களில் அவருக்கு ஃபிட்னஸ் பிரச்னைகள் இருந்தன. அவரின் தற்போதைய ஃபிட்னஸ் பற்றி எனக்குத் தெரியாது.

இருப்பினும், தனது உடற்தகுதிக்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார். எனவே, இந்த நேரத்தில் இது கொஞ்சம் துரதிர்ஷ்டவசமானதுதான்.

அதேசமயம், உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாகச் செயல்பட்ட கருண் நாயர் இந்த வாய்ப்புக்குத் தகுதியானவர்தான்." என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.

2023-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குப் பிறகு புஜாரா டெஸ்ட் அணியில் தேர்வுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rinku Singh: நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரை மணக்கும் ரிங்கு சிங் - யார் அந்த ப்ரியா சரோஜ்?

ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். இந்திய டி20 அணியில் கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். இதனிடை... மேலும் பார்க்க

Jasprit Bumrah: "எனக்கு கிரிக்கெட்டை விட என் குடும்பம்தான் முக்கியம்; ஏனெனில் அதுதான்..." - பும்ரா

நிகழ்கால கிரிக்கெட்டில் இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் மூன்று வகையான ஃபார்மெட்டிலும் நம்பர் ஒன் பவுலர் யாரென்றால் கண்ணை மூடிக்கொண்டு ஜஸ்பிரித் பும்ராவைக் கூறலாம்.நேற்று முன்தினம் (மே 30) குஜராத்துக்க... மேலும் பார்க்க

Ashwin : 'மும்பைக்கும் எப்படி அவ்ளோ அதிர்ஷ்டம் இருக்குன்னே தெரியல...' - அஷ்வின் சொல்லும் ரகசியம்!

18-வது ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்க... மேலும் பார்க்க

CSK: "அவருடைய வழிகாட்டுதலில் வளர விரும்புகிறேன்" - தோனி குறித்து உர்வில் படேல் உருக்கம்!

அமைதி, தலைமைத்துவம் மற்றும் பணிவைக் கற்றுக்கொடுக்கும் ஒரு மாஸ்டர்கிளாஸ்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2025 IPL சீசன் சிறப்பானதாக அமையவில்லை என்றாலும், இளைஞர்கள் - அனுபவமிக்க விரர்களின் பிணைப்பையும் அத... மேலும் பார்க்க

"RCB வென்றால் பொது விடுமுறை அளிக்க வேண்டும்" - கர்நாடக முதல்வருக்குக் கடிதம் எழுதிய ரசிகர்!

ஆர்.சி.பி அணியின் தீவிர ரசிகர் ஒருவர், வருகின்ற ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB வெற்றிபெற்றால், அந்த நாளை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம்... மேலும் பார்க்க

ICC: 'இனி ஒரு இன்னிங்ஸிற்கு ஒரு பந்துதான்' - ஒருநாள், டி20, டெஸ்ட் விதிகளில் மாற்றம்; முழு விவரம்

ICC புதிய விளையாட்டு வரையறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜூன் மாதம் முதல் இந்த வரையறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதில் ஒருநாள் போட்டிகளில் ஒரே பந்தைப் பயன்படுத்தும் முறை கவன... மேலும் பார்க்க