செய்திகள் :

Seeman: 'சீமான் ஈழம் சென்றது உண்மைதான்; ஆனால் அந்தப் புகைப்படம்...' - கொளத்தூர் மணி சொல்வதென்ன?

post image
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரபாகரன் உடன் இருக்கும் போட்டோவை 'எடிட்' செய்து கொடுத்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சங்ககிரி ராஜ்குமார் சொன்ன எடிட்டிங் பற்றிய தகவல் உண்மையாக இருக்கலாம்.

சீமான் - கேப்டன் பிரபாகரன்

சீமான் ஈழம் சென்று வந்த இரண்டு ஆண்டுக்கு பிறகு, இந்தப் புகைப்படம் கிராபிக்ஸ் என்ற தகவல்கள் வெளியானது. அப்போது அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, பின்னர் மறந்துவிட்டோம். புகைப்படம் கிராபிக்ஸ் ஆக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. சீமான் ஈழம் சென்றபோது, அங்கிருந்தவர்கள் அவர் வந்து சென்ற செய்தியை மட்டும் தான் சொன்னார்கள்.

எனக்கு கிடைத்த தகவலின் படி அவர் சென்று வந்தது உண்மை. ஆனால் மிகக் குறைவான நேரம் மட்டும் பிரபாகரனை சந்திக்க, சீமானுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரபாகரனுடன் பலரும் திறந்தவெளியில் தான் புகைப்படம் எடுத்துள்ளார்கள்.

கொளத்தூர் மணி

தனியாக ஸ்டூடியோ போன்று இருக்கிறதா என்பது பற்றி எனக்கு தெரியவில்லை. சீமான் தன்னை முழுமையாக வெளிக்காட்டிக் கொள்வாரா? அல்லது இரண்டு முகமும் காட்டுவாரா? என்பது தெரியவில்லை" என்று பேசியிருக்கிறார்.

Trump : அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்ற டொனால்ட் ட்ரம்ப் 47-வது அதிபராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அமெரிக்கா அதிபராக இரண்டாவது முறை ட்ரம்ப் பதவியேற்ற இந்த நிகழ்வு உலக அரங்கில் கவனம் பெற்றிருக்கிறது.... மேலும் பார்க்க

”அமைதிப்படை படத்தில் வரும் அமாவாசைதான் பழனிசாமி" - செந்தில் பாலாஜி காட்டம்

”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23-ம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு மாண்புமிகு தளபதிதான் முதலமைச்சராகத் தொடர்வார் என்பதை 2026-ல் உணர்ந்து கொள்வார்” என்... மேலும் பார்க்க

Israel போர் நிறுத்தம்: பணயக்கைதிகளிடம் ஹமாஸ் வழங்கிய 'Gift Bag' உள்ளே இருந்தது என்ன?

ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்தப்படி நேற்று (ஜனவரி 19) 3 பெண் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களை காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படிக்கும் முன், 'பரிசு பை' ஒன்று வழங்கப்பட்... மேலும் பார்க்க