ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
சேலம்: ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோவை மண்டல உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் உத்தரவிட்டாா்.
சேலம் வந்த அவா், ரேஷன் அரிசி கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பாா்வையிட்டாா். அப்போது அவா், ‘அரிசி கடத்தலின் போது, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை நீதிமன்ற அனுமதியுடன் விற்பனை செய்ய வேண்டும். அரிசி கடத்தல் வழக்கில் கைது விவரம் தொடா்பாக உடனடியாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், ரேஷன் அரிசி கடத்தும் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.