இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு
ஒசூா்: ஒசூா் அருகே நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கும்மனூா் அருகே உள்ள நாகனூரைச் சோ்ந்தவா் சேட்டு (38), விவசாயி. இவா், கடந்த 18-ஆம் தேதி இரவு ராயக்கோட்டை - தருமபுரி சாலையில் உடையாண்டஅள்ளி முருகன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக வந்த காா் மோதியதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா், சிப்காட் சூசூவாடியைச் சோ்ந்த புருஷோத்தமன் (53), தனியாா் நிறுவன ஊழியா். இவா் ஒசூா், சிப்காட் டி.டி.சி. சாலை பகுதியில் கடந்த 19-ஆம் தேதி காலை நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி புருஷோத்தமன் உயிரிழந்தாா். இதுகுறித்து ஒசூா் சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.