செய்திகள் :

Shahi Masjid:``ஒடுக்குமுறை, பிரிவினை... உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்க வேண்டும்"- பிரியாங்கா காந்தி

post image

இந்திய அரசின் பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (3), 1904-ன் கீழ், மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இருக்கிறது ஷாஹி ஜும்மா மஸ்ஜித். இந்த மஸ்ஜித் மீது ஞானவாபி மஸ்ஜித் - காசி விஸ்வநாத் கோயில் விவகாரத்தில் மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ``சம்பாலில்தான் கல்கி என அழைக்கப்படும் விஷ்ணுவின் அவதாரம் எதிர்காலத்தில் வெளிப்படும். அந்த அவதாரம் இன்னும் தோன்றவில்லை. ஆனால், அந்த அவதாரத்துக்காக இங்கே 'ஹரிஹர் கோயில்' பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டிருந்தது. அந்தக் கோயில் இடத்தில் இப்போது மஸ்ஜித் செயல்பட்டுவருகிறது. எனவே, அதில் பொதுமக்கள் நுழைவதற்கு அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மோடி - பிரியாங்கா காந்தி

அது தொடர்பாக ஆய்வு செய்ய சம்பால் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு, ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு கடந்த 19-ம் தேதி ஆய்வு நடத்தியது. அதைத் தொடர்ந்து நேற்றும் ஆய்வு நடத்தச் சென்றிருக்கிறது. இந்த ஆய்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அந்தப் பகுதி மக்கள், அதற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றனர். அப்போது காவல்துறைக்கும் - மக்களுக்கும் மத்தியில் வன்முறை வெடித்தது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். தற்போதும் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் வயநாடு எம்.பி பிரியாங்கா காந்தி, தன் எக்ஸ் பக்கத்தில், `` உத்தரபிரதேச மாநிலம் சம்பாலில் ஏற்பட்ட திடீர் வன்முறையில் மாநில அரசின் அணுகுமுறை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்படிப்பட்ட சென்சிட்டிவான விஷயத்தில், அவர்களின் மறுபக்கத்தையும் காதில் வாங்காமல், இரு தரப்பின் நம்பிக்கையையும் எடுத்துக் கொள்ளாமல் நிர்வாகம் அவசர அவசரமாகச் செயல்பட்ட விதம், அந்தச் சூழலை அரசே கெடுத்துவிட்டதையே காட்டுகிறது.

யோகி ஆதித்ய நாத்

தேவையான நடைமுறையையும், கடமையையும் பின்பற்ற வேண்டும் என்று கூட நிர்வாகம் கருதவில்லை. ஆட்சியில் அமர்ந்து பாரபட்சம், ஒடுக்குமுறை, பிரிவினையை பரப்ப முயல்வது மக்களின் நலனோ, நாட்டின் நலனோ அல்ல. மரியாதைக்குரிய உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அமைதி காக்க வேண்டும் என்று மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

DMK: கோஷ்டி பூசலால் ப்ளக்ஸ் பேனர் கிழிப்பு; என்ன நடக்கிறது நாகை திமுகவில்?

நாகப்பட்டினத்தில் நேற்று (நவம்பர் 25) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று முன்தினம் இரவே நாகப்பட்டினம் சென்று வேளாங்கண்ணியில் உள்ள சர்ச் வ... மேலும் பார்க்க

`கூட்டணி துணையின்றி திமுக ஆட்சி சாத்தியமில்லை' - கே.பாலகிருஷ்ணன் பேச்சும் பின்னணியும்

தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இருக்கின்றன. இந்த சூழலில் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சித்தம்பரம், "சிறுபான்மையின சமுதாயத்தைச் சேர... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: தேர்தல் புயலில் அடித்துச் செல்லப்பட்ட `ரயில் எஞ்சின்’ - அதிர்ச்சியில் ராஜ் தாக்கரே

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் உத்தவ் தாக்கரேயின் சித்தப்பா மகன் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தனியாக 120 தொகுதியில் போட்டியிட்டது. ஆரம்பத்தில் பா.ஜ.கவுடன் இணைந்து போட்டியிட முயன்றது. ஆ... மேலும் பார்க்க

Shahi Masjid: ``ஷாஹி மஸ்ஜித் கல்கி அவதாரத்துக்கான இடம்" - வழக்கும் வன்முறையும்! - முழுத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் இருக்கிறது ஷாஹி ஜும்மா மஸ்ஹித். இந்த மஸ்ஜித் பழங்கால நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3 (3), 1904-ன் படி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வென்றது எப்படி?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய சரி... மேலும் பார்க்க