செய்திகள் :

Shruti Haasan: ``கடவுள் நம்பிக்கைதான் என் பலம்... அதை நானே கண்டடைந்தேன்" - நடிகை ஸ்ருதிஹாசன் பேட்டி

post image

பாடகர், இசையமைப்பாளர், நடிகை, மாடல் எனப் பலத் துறைகளில் பிஸியாக இருக்கிறார் கமல் ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்பதத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டியளித்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் உங்களை வலிமையாக்கியது எது? எனக் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த நடிகை ஸ்ருதிஹாசன் ``என்னுடைய மிகப் பெரிய வலிமை கடவுள் நம்பிக்கைதான். என் பக்தி என்னுடைய பெற்றோரிடமிருந்து கிடைத்ததல்ல.

ஸ்ருதிஹாசன்

அது என்னுள் தானாக நானே கண்டடைந்தது. என் வீடு ஒரு நாத்திக இல்லம். என் அம்மா ஆன்மீகவாதி ஆனால் என் அப்பா... சொல்லவே தேவையில்லை. எனவே வளரும்போது கடவுள் என்ற கருத்து எங்களுக்கு இருந்ததில்லை. ஆனால், அந்த சிந்தனையை எனக்குள் நானே கண்டுபிடித்தேன். கடவுளின் சக்தியை நான் மிகவும் நம்புகிறேன். அந்த சக்தி என்னை என் வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது. நான் சிறுவயதில் வசித்த எங்கள் காலனியில், நான் சைக்கிள் ஓட்டுவதற்கு ஒரு பாதை இருந்தது. சில காரணங்களால் பிரதான வாசல் பகுதியில் சைக்கிள் ஓட்டக்கூடாது எனத் தடுத்திருந்தார்கள்.

ஆனால், ஒரே நேரத்தில் தினமும் சர்ச் - கோவில்களில் மணிச்சத்தம் கேட்கும். அப்போது அங்கு என்ன இருக்கிறது எனப் பார்க்க விரும்பினேன். என் வீட்டிலிருந்து கோயில் வெகு தொலைவு என்பதால், சர்ச்சுக்கு அடிக்கடி சென்று வருவேன். 5- 6 மாதங்களாக இது தொடர்ந்தது. ஆனால் என் வீட்டில் யாருக்கும் அது தெரியாது. பொதுவாக குழந்தைகளிடம் இதை செய்யாதே என்றால்தான் செய்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் விஷயத்தில் அப்படி நான் செய்தது மதம்...

ஸ்ருதிஹாசன்

நான் முதன்முதலில் கோயிலுக்கு சென்றது கூட நினைவிருக்கிறது. நான் சிறுமியாக இருந்தபோது, சென்னையில் என் தாத்தா என்னை ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அதை அப்பாவிடம் சொல்லக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். அந்த சம்பவத்துக்குப் பிறகு கொஞ்சநாளில் அவர் இறந்துவிட்டார். ஆனால், ஆன்மீக ரீதியில் என் தாத்தாவுடன் நான் தொடர்புவைத்திருந்தேன்" என்றார்.

Khushbu: `அண்ணாத்த படத்தில நடிச்சதுக்கு வருத்தப்பட்டேன், ஏன்னா...' -குஷ்பு ஓப்பன் டாக்

ரஜினின் அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார் குஷ்பு.ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் அதிகமான விமர்சனங்கள... மேலும் பார்க்க

சகோதரிகளுடன் சமாதானம் ஆகிவிட்ட பிரபு, ராம்குமார் - சிவாஜி குடும்ப சொத்து விவாகரம் முடிவுக்கு வந்ததா?

நடிகர் சிவாஜி கணேசனின் மகள்கள் சாந்தி, தேன்மொழி இருவரும் தங்கள் சகோதரர்கள் பிரபு, ராம்குமார் இருவர் மீதும் குடும்ப சொத்து தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது அவர்களு... மேலும் பார்க்க

Thalapathy 69: விஜய்யுடன் இணைகிறாரா சந்தானம் - பின்னணி என்ன?

புத்தாண்டில் விஜய்யின் 'தளபதி 69' படத்தின் டைட்டில் வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவியதால், ரசிகர்கள் ஆவலுடன் தலைப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் தான் புது தகவலாகப் படத்தில் சந்தானம் இணைகிறார... மேலும் பார்க்க

Rajini: ``சமீபத்தில் நான் பார்த்த படம்... திரையுலகில் அவருக்கு நல்ல எதிர்காலம்" -பாராட்டிய ரஜினி

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'திரு.மாணிக்கம்'.இந்த டிஜிட்டல் க... மேலும் பார்க்க

விடா முயற்சி: ஆயிரம் மடங்கு அப்செட் ஆன அஜித்; ரிலீஸ் தள்ளிப்போனதன் பின்னணியில் நடந்தது இதுதான்!

இந்தப் புத்தாண்டு 'விடா முயற்சி'யின் டிரெய்லரோடு விடியும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக லைகா ஒன்றை அறிவித்தது. 'சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடா முயற்சி' திரைபப்டம் பொங்கல் வெ... மேலும் பார்க்க