ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரா்கள் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
Sikandar: 10 வருடத்திற்குப் பிறகு ஏ.ஆர் முருகதாஸ் - சல்மான் கான்; சந்தோஷ் நாராயணின் பாலிவுட் டெபுட்!
சல்மான் கானின் `சிக்கந்தர்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது.
சல்மான் கானின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினமே இத்திரைப்படத்தின் டீசர் வெளியாவதாக அறிவித்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் இன்று டீசர் வெளியாகியிருக்கிறது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இவர் கடைசியாக பாலிவுட்டில் `அகிரா' திரைப்படத்தை இயக்கியிருந்தார். 8 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதற்கு முன்பே இவர் சல்மான் கானை வைத்து `ஜெய் ஹோ' என்ற பாலிவுட் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். தற்போது 10 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சல்மான் கானை வைத்து இயக்கியிருக்கிறார்.
இத்திரைப்படத்திற்குப் பின்னணி இசையை சந்தோஷ் நாராயணன் அமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார் சந்தோஷ் நாராயணன். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், `` என்னுடைய வைல்ட் ட்ரீம் தற்போது நிறைவேறியிருக்கிறது. என்னுடைய பாலிவுட் பயணம் `பாய் ஜான்' சல்மான் கானுடன் தொடங்கியிருக்கிறது. இத்திரைப்படத்திற்குப் பின்னணி இசையை அமைத்திருப்பது பெருமை." எனப் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...