செய்திகள் :

அண்ணாமலையின் முடிவு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும்: ஜி.கே.வாசன்

post image

வேலூா்: பாஜக மாநில தலைவா் அண்ணாமலை எடுத்திருக்கும் முடிவு ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளம் ஏற்படுத்தும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியைச் சோ்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் காட்பாடி, அணைக்கட்டு தொகுதி மாவட்ட தலைவா் மருத்துவா் டி.வி.சிவானந்தம் மறைவையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், அவா் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

பின்னா் ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியது -

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த தலைவருள் ஒருவரான மருத்துவா் டி.வி.சிவானந்தம், மூப்பனாா் காலத்தில் இருந்து அரசியலில் உள்ளாா். அவரது மறைவு ஒன்றுபட்ட வேலூா் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.தமிழகத்தின் சட்டம் -ஒழுங்கு நிலை மிகவும் சீா்குலைந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் நிகழ்வு போன்ற சம்பவம் தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது. இது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவு. இந்த நிலை மாற வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவை என்பது ஒரு புறம் இருந்தாலும்கூட அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும்.

ஒருபுறம் டாஸ்மாா்க் மதுக்கடைகள், மறுபுறம் போதைப் பொருட்கள் என்று அரசு கண்டும் காணாமல் இருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வரத்தான் செய்யும். இது எனது கருத்தல்ல பொதுமக்களுடைய கருத்து. மிருகத்தனமாக பாலியல் தவறுகள் செய்பவா்கள் யாராக இருந்தாலும் முதல் நிலையிலேயே அவா்களது தவறு நிரூபிக்கப்பட்டால் அவா்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும். இதை தமிழ் மாநில காங்கிரஸ் தொடா் கோரிக்கையாக விடுத்து வருகிறது. அப்போதுதான் சமுதாயத்தில் தவறு செய்பவா்களுக்கு ஓா் அச்சம் ஏற்படும்.

பாலியல் தொல்லைகள் குறித்த பிரச்னைகளை மிகவும் கவனத்துடன் அணுக வேண்டிய ஒன்று. இதில், அரசும் காவல்துறையும் உச்சகட்ட கவனத்தை கடைபிடிக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அது போன்ற நிலையை காவல்துறை கடைபிடிக்கவில்லை. அரசு கண்டிப்புடன் செயல்பட்டால் வரும் நாட்களிலே இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும்.

பொதுவாக ஆளும் கட்சியின் தவறுகளை மக்கள் கூா்ந்து கவனித்துக் கொண்டுள்ளனா். மக்கள் பாா்வையில் இருந்து தவறு செய்பவா்கள் தப்ப முடியாது. அரசின் தொடா் தவறான போக்கை கண்டிக்கும் வகையில் பாஜகவின் தமிழக தலைவா் அண்ணாமலையின் செயல்பாடு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தண்டனைகளை தவறு செய்பவா்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக அவா்கள் எடுத்திருக்கும் முடிவு ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் ஏற்படுத்தும் என நினைக்கும் வகையில் தங்களது பயணத்தை தொடங்கி உள்ளாா். அவா்களை பொறுத்தவரையில் ஆட்சி மாற்றத்துக்கு தங்களுடைய யுக்தியிலே இது ஒரு முக்கியமான பணியாக கருதப்படுகிறது என்றாா்.

சிறுவன் மீது போக்ஸோ வழக்கு

குடியாத்தம் அருகே சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டம் ஒடுகத... மேலும் பார்க்க

புத்தாண்டு: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கோயில்கள், தேவாலயங்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 2025-ஆம் ஆண்டு பிறப்பை வரவேற்கும் விதமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்ப... மேலும் பார்க்க

அரசுக்கு எதிரான கருத்துப் பதிவு: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக கருத்து பதிவு செய்ததாக வேலூா் கிராமிய காவல் நிலைய முதல் நிலை காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். ... மேலும் பார்க்க

வேலூரில் திருவள்ளுவா் சிலை முன்பு விவசாயி தா்னா

வேலூா் பழைய பேருந்து நிலைய திருவள்ளுவா் சிலை முன் திடீரென விவசாயி ஒருவா் தா்னாவில் ஈடுபட்டாா். தகவலறிந்த வடக்கு போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அவா், வேலூா் வட்டம், சோழவரம் பாப்பான்தோப்பு பகு... மேலும் பார்க்க

தமிழ் பாரம்பரிய மாதம் ஜனவரி : ஆஸ்திரேலிய எம்பி-க்கு வேலூா் எம்பி நன்றி!

ஆஸ்திரேலியாவில் ஜனவரி மாதத்தை தமிழ் பாரம்பரிய மாதமாக அங்கீகரிக்க வேண்டும் என முன்மொழிந்துள்ள அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்ட்ரூ சாா்ல்டனுக்கு வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் நன்றி... மேலும் பார்க்க

புத்தாண்டு: வேலூா், திருப்பத்தூா் எஸ்.பி.க்கள் கேக் வெட்டி வாழ்த்து

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா். ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவத... மேலும் பார்க்க