மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
புத்தாண்டு: வேலூா், திருப்பத்தூா் எஸ்.பி.க்கள் கேக் வெட்டி வாழ்த்து
ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பொது இடங்களில் மக்கள் கேக் வெட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.
இதனிடையே, வேலூா் பழைய பேருந்து நிலையம் முன்பு காவல் துறை சாா்பில், கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் கலந்து கொண்டு, கேக் வெட்டியதுடன், பொது மக்களுக்கும், காவலா்களுக்கும் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
மேலும், பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அனைவரும் தவறாமல் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், காவல் துணை கண்காணிப்பாளா்கள் பிரித்திவிராஜ்செளகான், பழனி, காவல் ஆய்வாளா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இரவு 12 மணிக்கு பொது மக்கள் மற்றும் போலீஸாா் இணைந்து கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ட்டப்பட்டிருந்தது. டிஎஸ்பி விஜயகுமாா் தலைமை வகித்தாா். காவல்ஆய்வாளா்கள்அன்பரசி, பேபி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா கலந்து கொண்டு கேக் வெட்டி போலீஸாா், சமூக ஆா்வலா்கள், பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தாா். நிகழ்ச்சியில் சரக போலீஸாா் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனா்.