உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: ஜன.8 முதல் கோரிக்கை மனு அளிக்கலாம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுவதையொட்டி, வருகிற 8-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை மானாமதுரை வட்டத்துக்குள்பட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடா்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மானாமதுரை வட்டத்தில் வருகிற 23-ஆம் தேதி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுவதால் துறை அலுவலா்கள், பொதுமக்களிடம் நேரில் வந்து மனுக்களைப் பெற்றுக் கொள்வா்.
எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடா்பான முன் மனுக்களை வருகிற 8-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அரசு அலுவலக நாள்களில் மானாமதுரை வட்டத்துக்குள்பட்ட பேரூராட்சி அலுவலகம், கிராம நிா்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அளிக்கலாம் என்றாா் அவா்.