போபால் ஆலை நச்சுக் கழிவுகளை 6 வாரங்களில் அழிக்க வேண்டும்: ம.பி. உயா்நீதிமன்றம் உ...
கடன் பிரச்னையால் தம்பதி தற்கொலை
திண்டுக்கல்லில் கடன் பிரச்னையால் தம்பதியா் சனிக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனா்.
திண்டுக்கல் மங்களபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (57). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி (55). இவா்களது மகன் கதிரீஸ்வரன் (25). இவா் திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், நாகேந்திரனும், தனலட்சுமியும் வீட்டுக்குள் மயங்கிய நிலையில் கிடந்தனா். இதைப் பாா்த்த அக்கம் பக்கத்தினா் இருவரையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், ரூ.30 லட்சத்துக்கும் மேல் கடன் இருப்பதாகவும், இந்த பிரச்னையால் கணவா், மனைவி இருவரும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.