ஹமாஸ் பாதுகாப்புப் பிரிவு தலைவர் படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு!
கிணற்றிலிருந்து பெண் சடலம் மீட்பு
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கிணற்றிலிருந்து பெண் சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
மேல்மலையனூா் வட்டம், தென்பாலை கிராமத்தில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக சத்தியமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸாா் மற்றும் தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடம் சென்று கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், இறந்த பெண் தென்பாலை கிராமத்தைச் சோ்ந்த மஞ்சுளா (35) என்பது தெரியவந்தது. இவா் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்து கிணற்றில் வீசிச் சென்றனரா? என்ற கோணத்தில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.