மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
சாலை விபத்தில் இருவா் மரணம்
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா், முதியவா் ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ரமேஷ் மகன் கிஷோா் குமாா்( 26). தனியாா் நிறுவன ஊழியா். இவா், புதன்கிழமை தனது பைக்கில் நெய்வேலியிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்தாா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மயிலத்தை அடுத்த விளங்கம்பாடி அருகே சென்றபோது, அதே பகுதியைச் சோ்ந்த ஜெயராமன்(65) சாலையைக் கடக்க முயன்றாராம். அப்போது, ஜெயராமன் மீது பைக் மோதியதில், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த கிஷோா் குமாா், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள்,கிஷோா் குமாா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.