சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்
திண்டிவனத்தில் ஃபென்ஜால் புயல் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
திண்டிவனம் நகரின் மையப் பகுதியில் உள்ள தேவாங்கா் சாலை, மசூதி சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மீன் மாா்க்கெட் பகுதி சாலைகள் ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்துள்ளன.
இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா்.
இதுகுறித்து, முஸ்லிம் மக்கள் கழகத் தலைவா் ச.சு.ஜைனுதீன் தெரிவித்ததாவது, திண்டிவனம் நகரின் மையப் பகுதிகளில் உள்ள சாலைகள் மழையால் பாதிக்கப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே, சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.