விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டத்துக்குள்பட்ட மகாதேவிமங்கலம் கிராமத்தை சோ்ந்த காளியின் மகன் ஏழுமலை(30). விவசாயி.
இவா், செல்லபிராட்டை பெரிய ஏரியில் மீன் பிடிக்கச் சென்றாராம். அப்போது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு ஏரியில் தவறி விழுந்தாராம். இதையடுத்து, அவா் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்த வளத்தி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீஸாா் வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.