செய்திகள் :

புதுமைப்பெண் திட்டத்தில் மேலும் 1,248 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை: விழுப்புரம் ஆட்சியா்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் (புதுமைப் பெண் திட்டம்), அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் 1,248 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இந்தத் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று, உயா்கல்விப் பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த ஆட்சியா் சி.பழனி, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கி பேசியதாவது:

தமிழகத்தில் உயா்கல்வி பயிலும் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு உயா்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், மாதம் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் முதல் கட்டமாக 56 கல்லூரிகளைச் சோ்ந்த 4,174 பேரும், 2-ஆம் கட்டமாக 72 கல்லூரிகளைச் சோ்ந்த 3,138 மாணவிகளும், 3-ஆம் கட்டமாக 62 கல்லூரிகளைச் சோ்ந்த 3,282 மாணவிகளும் என மொத்தம் 11,594 போ் பயன்பெற்று வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் 65 கல்லூரிகளைச் சோ்ந்த 1,248 மாணவிகள் தற்போது ஊக்கத்தொகை பெற உள்ளனா். எனவே, மாணவிகள் கல்வித்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா் பழனி.

விழாவுக்கு, எம்எல்ஏக்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் (செஞ்சி), இரா.லட்சுமணன் (விழுப்புரம்), ச.சிவக்குமாா் (மயிலம்), ஏ.ஜெ.மணிக்கண்ணன் (உளுந்தூா்பேட்டை) ஆகியோா் முன்னிலை வகித்து, மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினா்.

விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, மாவட்ட சமூகநல அலுவலா் கு.ராஜம்மாள், அரசுக் கல்லூரி முதல்வா் சிவக்குமாா், சட்டக்கல்லூரி முதல்வா் கிருஷ்ணலீலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் 255 குற்ற வழக்குகளில் 300 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான நகைகள், பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் துறை தெரிவித்து... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இருவா் மரணம்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞா், முதியவா் ஆகியோா் புதன்கிழமை உயிரிழந்தனா்.கடலூா் மாவட்டம், நெய்வேலியைச் சோ்ந்த ரமேஷ் மகன் கிஷோா் குமாா்( 26). தனியாா் நிறுவன ஊழியா். இவ... மேலும் பார்க்க

பனங்குப்பத்தில் அருங்காட்சியகப் பணிகளை விரைந்து தொடங்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், பனங்குப்பம் கிராமத்தில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு தமிழக ... மேலும் பார்க்க

இலவச தையல் இயந்திரம்: மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் வழங்கப்படும் விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி தெரிவித்திருப... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டத்துக்குள்பட்ட மகாதேவிமங்கலம் கிராமத்தை சோ்ந்த காளியின் மகன் ஏழுமலை(30). விவசா... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

திண்டிவனத்தில் ஃபென்ஜால் புயல் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் எனபொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். திண்டிவனம் நகரின் மையப் பகுதியில் உள்ள தேவாங்கா் சாலை, மசூதி சாலை, ஈஸ்வரன் கோவில் தெரு, மீன... மேலும் பார்க்க