செய்திகள் :

Soundariya: `நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல!' - ஆந்திராவில் மோகன் பாபு மீது ஒருவர் புகார்!

post image

நடிகை செளதர்யா ஏப்ரல் 17, 2004-ம் ஆண்டு விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால், 22 வருடங்களுக்குப் பிறகு தற்போது நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை என ஆந்திராவைச் சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் புகாரளித்திருக்கிறார். தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் செளந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக அவர் புகார் கொடுத்திருக்கிறார்.

நடிகை சௌந்தர்யா

ஆந்திரா மாநிலம், கமம் என்கிற மாவட்டத்தைச் சேர்ந்த சிட்டிமல்லு, "நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. செளந்தர்யாவின் ஜல்பள்ளி கிராமத்திலுள்ள நிலத்தை மோகன் பாபு பெற நினைத்திருக்கிறார். அந்த நிலத்தை செளந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் விற்பனை செய்வதற்கும் மறுப்பு தெரிவித்திருக்கிறார். அவரின் மரணத்திற்குப் பிறகு அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அழுத்தம் கொடுத்து சட்டவிரோதமாக அந்த நிலத்தை மோகன் பாபு ஆக்கிரமித்திருக்கிறார்" எனவும் புகார் கூறியிருக்கிறார்.

மோகன் பாபு

கமம் கிராமத்தின் உதவி கமிஷனர் மற்றும் மாவட்ட அலுவலர் என இருவரிடமும் புகாரளித்து அரசாங்கம் அந்த நிலத்தை கையகப்படுத்தி ஆசிரமங்களுக்கும், ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினருக்கும் வழங்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, இதே புகாரில் மோகன் பாபுவுக்கு அவரின் இளைய மகன் மஞ்சு மனோஜுக்கும் இடையேயான மோதலையும், மஞ்சு மனோஜுக்கு நிதி கோரியும் இந்த மனுவில் சிட்டிமல்லு குறிப்பிட்டிருக்கிறார்.

``நான் என் வார்த்தைகளைத் திரும்பப் பெறப்போவத்தில்லை... "- சினிமா குறித்து குஷ்பு

நடிகை குஷ்பு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா சார்ந்த சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவர், "பெண்களை மையமாகக் கொண்ட படம் எப்போதுமே பிளாக்பஸ்டர் ஆகாது. நான் என் வார்... மேலும் பார்க்க

Jailer 2: இணைகிறாரா மாஸ் ஹீரோ? பட்டை தீட்டப்பட்ட ஃபார்முலா; படத்தின் கதை இது தானா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் கூட்டணியின் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடந்துவருகிறது. 'கூலி' படப்பிடிப்பில் தனது போர்ஷனை முடித்துக்கொடுத்துவிட்ட வேகத்தில், அடுத்த பட... மேலும் பார்க்க

``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்குநர் பாரி இளவழகன்

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்', 'ஜடா', 'குட் நைட்', போன்ற படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றிய ஶ்ரீகாந்த் உயிரிழந்திருக்கிறார்.பாரி இளவழகன் இயக்கி நடித்திருந்தத் திரைப்படம் 'ஜமா'. கடந்த வருடம் ஆகஸ... மேலும் பார்க்க

``ப்ரியா பவானி சங்கருக்கு அப்போல்லாம் திரைப்படங்கள்ல நடிக்கிற ஆசையில்ல'' - நடிகர் ஈஸ்வர்

`ஆபீஸ்', `கல்யாணப் பரிசு', `தேவதையைக் கண்டேன்' போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் ஈஸ்வர். அவரைச் சந்தித்து அவருடைய சின்னத்திரை அனுபவங்கள் தொடர்பாக பல விஷயங்களைப் பேசி... மேலும் பார்க்க

Priyanka Chopra: ``நான் முதலில் பயந்தேன்; ஆனால், விஜய் அன்பாக நடந்து கொண்டார்!'' - மது சோப்ரா

நடிகை ப்ரியங்கா சோப்ரா விஜய்யுடனான `தமிழன்' திரைப்படத்தின் மூலமாகத்தான் நடிப்பிற்கு அறிமுகமானார். ப்ரியங்கா சோப்ரா நடித்த ஒரே திரைப்படம் இது மட்டும்தான். இத்திரைப்படத்திற்குப் பிறகு பாலிவுட்டில் அதிகம... மேலும் பார்க்க

Murmur Review: `Found Footage' முயற்சி ஓகே; ஆனால் இது ஒரு மர்மமான சினிமா அவஸ்தை!

ஜவ்வாது மலையில் ஒரு காடு. அதில் சூனியக்காரி ஆவி ஒன்று இருக்கிறதாம். அங்கேயே கன்னிமார் எனப்படும் நாட்டார் தெய்வங்களும் உலாவுகிறார்களாம். அதை ஆவணப்படுத்த நான்கு பேர் கொண்ட குழு ஒன்று செல்கிறது. அவர்களுக... மேலும் பார்க்க