Squid Game: 'ஸ்குவிட் கேம் சீசன் 3' - அப்டேட் கொடுத்த நடிகர் லீ ஜங் ஜே
நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற, சர்வைவல் த்ரில்லர் தொடர், 'ஸ்குவிட் கேம்'.
தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தத் தொடருக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். 9 எபிசோடுகளை கொண்ட இத்தொடரை, வாங் டோங் - யுக் (Hwang Dong hyuk) இயக்கி இருந்தார்.
பலத்த வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இரண்டாவது சீசனை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், வரும் டிசம்பர் 26-ம் தேதி இரண்டாம் பாகம் வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் அறிவித்திருந்தது.
அதுமட்டுமின்றி இந்த 'ஸ்குவிட் கேம் சீசன் 2'-வின் டிரெய்லரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் 'ஸ்குவிட் கேம் சீசன் 3' இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. அதை தீர்க்கும் வகையில் இப்போது ஒரு பதில் கிடைத்திருக்கிறது.
ஸ்குவிட் கேமில் நடித்த நடிகர் லீ ஜங் ஜே சமீபத்தில் ஒரு காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார். அதில் ஸ்குவிட் கேம் குறித்து அவர் பேசுகையில், 'ஸ்குவிட் கேம் சீசன் 3' நிச்சயம் வருமென்றும் அது 2025 ஆண்டில் வெளியாகலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...