செய்திகள் :

srikanth: ``கடைசி வரை சினிமாவில்தான்... 2 கட்சியாக சினிமா பிரிஞ்சு இருக்கு..'' - நடிகர் ஶ்ரீகாந்த்

post image
'ஏப்ரல் மாதத்தில்', 'மனசெல்லாம்', 'சதுரங்கம்', 'நண்பன்' என பல திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஶ்ரீகாந்த்.

'ஆப்பிள் பெண்ணே நீ யாரோ...' என அவரது பாடல் கோலிவுட்டையே முணு முணுக்க வைத்து மியூசிக் சேனல்களில் ரிப்பீட் மோடில் ஓடிய பாடல்களாகும். சமீபத்தில் ஶ்ரீகாந்த் அதிகமாகப் படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது  ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘கீதாஞ்சலி’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ உள்பட பல ஹிட் படங்களை இயக்கிய கே.ரங்கராஜ் இயக்கத்தில் ‘கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் தனது திரைத்துறைப் பயணம் குறித்தும் தமிழ் சினிமாவின் இன்றைய நிலை குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகர் ஶ்ரீகாந்த். இதுகுறித்துப் பேசியிருக்கும் அவர், "நான் இந்தத் திரையுலகத்திற்கு வந்து 25 ஆண்டுகள் கடந்திருச்சு. என்னுடைய இந்தப் பயணத்துல என்னை வாழ்த்திய, விமர்சித்த, திட்டிய, ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள். 

சமீபத்துல ஒரு பெரிய சம்பவம் நடந்தது. நான் பார்த்து வியந்த மிகப்பெரிய இயக்குநர் ஒருவர், படத்துல நடிச்சேன். அந்தப் படத்தோட ஷூட் வெளிநாட்டுல நடந்துச்சு. ஒருநாள் லோகேஷனுக்கு வாடகை மட்டும் 10 லட்சம் ரூபாய். காலையில 8 மணிக்கு ஷூட்டிங்குனு சொன்னாங்க. நான் காலையில 7 -7.40 மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். ஆனால், அந்த இயக்குநர் மாலை 3.30 மணிக்கு வந்தார். அந்த மாதிரியான இயக்குநர்களையெல்லாம் பார்த்திருக்கேன்.  இந்தப் படத்தோட இயக்குநர் கே.ரங்கராஜ் சார் 7 மணிக்கு ஷூட்டுக்கு 6.30 மணிக்கெல்லாம் செட்டுல இருப்பார். ரொம்ப அர்பணிப்போட வேலை பார்ப்பார். அவரைப் போல உழைப்பவர்களுக்கு எப்போதும் ஆதரவு தர வேண்டும்.

எனக்கு சினிமா தவிர வேறேதும் தெரியாது. கடைசி வரை சினிமாவில்தான் இருப்பேன். பார்வையாளர்களும் நான் நல்ல படம் பண்ண என்னை தூக்கிவிட ரெடியாக இருக்காங்க. நிச்சயம் நான் நல்ல படம் பண்ணுவேன். கடைசி வரை ஓடிகிட்டேதான் இருப்பேன்.

'பக் பக் மாடப்புறா...' பாடலுக்குப் புதிதாக செட் போட தயாரிப்பாளர் பணம் தரமாட்டேனு சொல்லிட்டார். கிடைச்சத வச்சு அந்தப் பாடல ஷூட் பண்ணோம். இப்போ அந்த மாதிரி ஆடை போடச் சொன்ன யாராவது போடுவாங்களா?இன்னைக்கு இருக்கும் சாய் பல்லவி அவர்கள் அதுபோன்ற ஆடையைப் போடுவார்களா? இன்னைக்கு இது பிடிக்கலைனா, நடிகர் தைரியமாக பிடிக்கலை வேணாம்னு சொல்லணும்.

முன்னாடியெல்லாம் சென்னையில அதிகமான ஸ்டுடியோக்கள் இருக்கும். எல்லாரும் இங்க வந்துதான் சினிமா கற்றுக்குவாங்க. ஆனால், இன்னைக்கு ஹைதராபாத்ல அதிகமான சினிமா ஸ்டுடியோக்கள் இருக்கு. அதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கு. நம்மகிட்ட ஒற்றுமையில்லை. சினிமா சங்கங்கள் இரண்டு கட்சியாக பிரிந்துவிடுகிறார்கள். அதுவேண்டாம். ஒற்றுமையோட இருந்து, மீண்டும் நம் சினிமாவை, சென்னையை உயர்த்தணும்" என்று பேசியிருக்கிறார்.

``மணி ரத்னம் சாருக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்ல Buddy-யும் ஒருத்தர்!'' - இயக்குநர் சத்தியசீலன்

திரையிசையை தாண்டி சுயாதீன இசைக்கும் இப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.அந்த வரிசையில் தற்போது புதியதாக வெளிவந்திருக்கும் `Buddy' என்கிற சுயாதீன ஆல்பமும் மக்களின் லைக்ஸைப் பெற்றிர... மேலும் பார்க்க

Jason Sanjay: ஜி.கே. மணியின் இல்ல திருமண விழா; ஜேசன் சஞ்சய், விஜய் சேதுபதி சேலம் விமான நிலையம் வருகை

இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யுடைய மகன் ஜேசன் சஞ்சய். `லைகா நிறுவனம்' தயாரிப்பில் தன்னுடைய முதல் படத்தை இயக்கவிருக்கிறார், ஜேசன் சஞ்சய். இப்படத்தில் சந்தீப் கிஷன் முன்... மேலும் பார்க்க

Rajini Kanth: ரஜினி திருமண நாளில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு; வேலூர் ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்

தமிழ் சினிமாவில் இன்றும் அசைக்க முடியாத உச்சத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.கடந்த 26-2-1981 அன்று லதாவைக் கரம் பிடித்த ரஜினிகாந்த் நாளை (புதன்கிழமை) தனது 44-ம் ஆண்டு ... மேலும் பார்க்க

``அந்த நொடியில இருந்து கமல் சார் என் அண்ணன் ஆனார்'' - நெகிழும் 'வில்லிசை' பாரதி திருமகன்

'சுனிதா வில்லியம்ஸ் போல ஸ்பேஸுக்குப் போகணும், நயன்தாரா போல கரியர்ல ஜெயிக்கணும், ஜெயலலிதா போல அரசியல் ஆளுமையா இருக்கணும்' என்று இந்தக்கால பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் இவர்களைப்போல, 1980-களில் கு... மேலும் பார்க்க

Sivakumar: ``ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து IAS, IPS வரக் காரணம் பெரியார்தான்" - நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமார் இன்று (பிப் 25) திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.சிவகுமார் நடிகர் என்பதையெல்லாம் தாண்டி ஓவியத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். தன் வாழ்நாளில்... மேலும் பார்க்க

Sivakarthikeyan:``சிவகார்த்திகேயனோட வளர்ச்சி பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனா, எனக்கு..''- ஷாம்

நடிகர் ஷாம் நடித்திருக்கும் `அஸ்திரம்' திரைப்படம் மார்ச் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ஷாம் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வ... மேலும் பார்க்க