செய்திகள் :

Stalin: 'நேற்று கட்சித் தொடங்கியவர்கள் கூட, முதல்வராவோம் என பேசுகிறார்கள்' - ஸ்டாலின் சொல்வதென்ன?

post image
நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினர் 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று ( ஜனவரி 24) திமுகவில் இணைந்திருகின்றனர்.

மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், " திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உங்களை வரவேற்கிறேன். திமுகவில் சேர்வதற்கு ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்குக் கோபம் வருகிறது. திமுக ஒன்றும் நேற்று முளைத்த காளான் அல்ல. கழகம் படிப்படியாக வளர்ந்தபின்தான் தேர்தலில் போட்டியிட்டோம். 1949-ல் தொடங்கி 1957 ஆம் ஆண்டுதான் போட்டியிட்டோம். ஆனால் தற்போது கட்சித் தொடங்கிய உடனேயே நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார்கள்.

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

நேற்று கட்சித் தொடங்கியவர்கள் கூட...

நேற்று கட்சித் தொடங்கியவர்கள் கூட, தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராவோம் என பேசுகிறார்கள். அவர்கள் யார் என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. அப்படி சொல்லி இந்த மேடைக்கான அங்கீகாரத்தைக் குறைத்து கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை. ஏழைகளுக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக, தமிழகத்துக்குத் தொண்டாற்றத் தொடங்கியது திமுக. இங்கே இணைபவர்கள், தாங்கள் முன்பிருந்த கட்சியின் பெயரைக்கூட சொல்ல விரும்பவில்லை.

சிறப்பான முடிவு எடுத்து இன்று திமுகவில் தங்களை இணைத்துள்ளீர்கள்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ஆளுநர் குறித்து பேசிய அவர், " திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார். ஆளுநர் ரவியை தயவுசெய்து மாற்றிவிட வேண்டாம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்கள் தொடர்ந்து பேசட்டும், மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள். திராவிடத்துக்கு எதிராக பேசுபவர்களை கண்டு திமுகவினர் கவலைப்பட தேவையில்லை. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்துக்கும் ஆளுநர் வர வேண்டும், ஆளுநர் உரையை படிக்காமல் அவர் புறக்கணிக்க வேண்டும். அடுத்த முறையும் நிச்சயம் திமுகதான் ஆட்சிக்கு வரும்” என்று பேசியிருக்கிறார்.


Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இரட்டிப்பு - தேர்தலைக் குறிவைத்து திமுக அரசின் பலே பிளான்?

ரேஷன் கடை ஊழியர்களுக்கு இந்தாண்டுக்கான விடுமுறை தினங்களை அதிகப்படுத்தி உத்தரவிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையை தற்போது திருத்தி வெளியிடப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு... மேலும் பார்க்க

``கொஞ்ச நஞ்சம் பேச்சா; திரள்நிதியை திருடிய உனக்கே..." - வருண்குமார் ஐ.பி.எஸ் பதிவு

தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி வருண்குமாரின் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.முன்னதாக, சென்னையில் முதல்வர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 3,000-க்கும் மேற்பட்டோர் தி.மு.க-வில் இணை... மேலும் பார்க்க

BJP: வெளியான மாவட்டத் தலைவர்கள் பட்டியல்; கொதிக்கும் சீனியர்கள்; சர்ச்சையில் தமிழக பாஜக!

கடந்த நவம்பரில் தமிழக பா.ஜ.கவில் உட்கட்சி தேர்தல் தொடங்கியது. முதலில் கிளை பொறுப்பாளர்கள், மண்டல தலைவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடந்தது. மு... மேலும் பார்க்க

வேங்கைவயல்: "குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம்.." - வழக்கை CBI-க்கு மாற்ற திருமாவளவன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கழிக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பிரச்னையாக வெடித்தது. சம்பவம் நடந்து கிட்டதட்ட ... மேலும் பார்க்க

"Seemanக்கு கட்சி நடத்தும் தகுதியில்ல" - NTKவில் இருந்து விலகியவர்கள் ஆவேசம்

சீமான் மீது அதிருப்தியிலிருந்த நாம் தமிழர் கட்சியினர் சிலர் இன்று தி.மு.க-வில் இணைந்தனர். கட்சியிலிருந்து விலகியது ஏன் என தி.மு.க-வில் இணைந்தவர்கள் கூறும் கருத்துகள் இங்கே. மேலும் பார்க்க