சாம்பியன்ஸ் டிராபி மகுடம் சூடிய இந்திய அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
'StartUp' சாகசம் 14 : நல்லெண்ணெய் மில் டு கால்நடைத் தீவனம் - `காமதேனு கேட்டில் ஃபீட்ஸ்’ சாதித்த கதை
தமிழ்நாடு கடந்த 10 ஆண்டுகளில் கால்நடை வளர்ப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தியாவின் ஜிஎஸ்டிபியில் கால்நடை தீவனத்தில் தமிழ்நாடு 5.69% பங்கையும் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்த கால்நடை எண்ணிக்கையில் 2023-24 ஆம் ஆண்டில், தோராயமாக சுமார் 88.5 லட்சம் மாடுகள் மற்றும் எருமைகள் உள்ளது. இவற்றிற்கு ஒரு வருடத்திற்கு சுமார் 120 லட்சம் டன் கால்நடை தீவனம் தேவைப்படுகிறது. இந்த கால்நடை தீவனச்சந்தையில் பெரிய உற்பத்தியாளர்கள் (42%): நடுத்தர உற்பத்தியாளர்கள் (35%), சிறு உற்பத்தியாளர்கள்(23%) என கால்நடை தீவனச்சந்தையில் தங்கள் பங்களிப்பை இவர்கள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கால்நடை மற்றும் கோழி உணவு தொழில் வளர்ந்து வரும் துறையாக உள்ளது. அரசின் ஆதரவு, நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் சிறந்த உற்பத்தி முறைகள் மூலம் இந்த துறை மேலும் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தீவனச்சந்தையில்தான் கடந்த 46 வருடங்களாக ஈரோட்டைச் சேர்ந்த RGS Feeds, காமதேனு கேட்டில் பீட்ஸ் எனும் நிறுவனம் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கால்நடைத் தீவனத்தில் இவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்து வருகின்றது. இந்த வாரம் ஸ்டார்அப் சாகம் தொடரில் இந்நிறுவவனம் வளர்ந்த கதையை இதன் இப்போதைய தலைமுறையில் மேலாண்மை செய்துவரும் ராமமூர்த்தி அவர்களிடம் கேட்போம்
உங்கள் `காமதேனு கேட்டில் ஃபீட்ஸ்’ துவங்கப்பட என்ன காரணம்? எப்படி தீவனத்துறைக்கு வந்தீர்கள்?
``1979ல் எங்கள் ஆர்ஜிஎஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. அதற்கு முன்னாடி எங்கள் தாத்தா கே. கணபதி அவர்களும், என்னுடைய அப்பா ஜி. சுந்தரம் அவர்களும் தான். அவர்கள் நல்லெண்ணெய் மில் வைத்து செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். காமதேனு நல்லெண்ணெய், சாமுண்டி நல்லஎண்ணெய் என்ற பெயரில் தமிழகம் முழுதும் விற்பனை செய்துகொண்டிருந்தோம். நல்லெண்ணெய் எடுத்ததுக்கு அப்புறம் வரக்கூடிய எள்ளு புண்ணாக்குகளும் தனி சந்தை இருந்து வந்தது... குறிப்பாக நிறைய வர்த்தக நிறுவனங்கள் எங்களிடம் இந்த எள்ளு புண்ணாக்குகளை வாங்க வருவாங்க. எங்க அப்பா சுந்தரம், நிறைய ஊருக்கு மார்க்கெட் பண்ண போகும் போது, நிறைய ஊர்களில், நிறைய நிறுவனங்களில் இருந்து மாட்டு தீவனம், கால்நடைகளுக்கான ஊட்ட உணவுகளை பெரும் நிறுவனங்கள் விற்பதை பார்த்தார்.

அந்த நேரத்தில் முன்னணி நிறுவனங்கள் எல்லாமே கால்நடை தீவனத்துறையில் புதுபுதிதாக அறிமுகம் செய்துகொண்டிருந்தார்கள். அதைப்பார்த்த என் அப்பா அதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது என்பதை அறிந்து 1979ல் இந்த நல்லெண்ணெய் வழியே கிடைக்கும் புண்ணாக்குகளை மதிப்பு கூட்டி கால்நடை தீவனமா மாற்றி விற்பனை செய்யவேண்டும் என்று முடிவெடுத்து, என் தாத்தாவுடன் இணைந்து ஆர்ஜி சுந்தர் அண்ட் கோ என்கிற நிறுவனத்தை ஈரோட்டில் நிறுவினார்.
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 5 மெட்ரிக் டன் தீவனம் உற்பத்தி பண்ணக்கூடிய ஒரு தொழிற்சாலை நிறுவினோம். அதுக்கு சந்தைப்படுத்த வைத்ததுதான் காமதேனு என்கிற பிராண்ட் , பின் தமிழகம் மற்றும் கேரளாவுல எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, 1985ல் ஆண்டுக்கு அப்புறம் ஒரு நாளைக்கு ஒரு 40 டன் உற்பத்தி பண்ணக்கூடிய ஒரு நிறுவனமாக என் அப்பா அதை வளர்த்தெடுத்தார் . எங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு பொருளும் மக்கள் இடையே ரொம்ப நல்ல வரவேற்பை பெற்றது.”
``உங்கள் தாத்தா, உங்கள் அப்பா ஆரம்பித்த நிறுவனத்திற்குள் நீங்கள் எப்போது வந்தீர்கள்? நீங்கள் எப்படி காமதேனு கேட்டில் ஃபீட்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தினீர்கள்?"
``நான் 2005 RGS Feeds காமதேனு மேலாண்மைக்குள் வந்த பிறகு தமிழ்நாடு கேரளாவில் இருந்த விற்பனையை இன்னும் விரிவு படுத்தலாம் என்று யோசித்து அதற்கான திட்டம் வகுத்தோம். சந்தையில் நிறைய நுண்ணூட்டங்கள் தேவை இருந்தது. அதற்காக கால்நடைகளுக்கான நுண்ணூட்டங்கள் தயார் செய்யும் நிறுவனமாக ஆர் ஜே எஸ் பி நியூட்ரான் 2008 ல ஆரம்பிச்சோம் . பல கால்நடை மருத்துவர்களுடைய ஆலோசனைகளைப்பெற்று எங்கள் தீவனத்தில் எல்லா வகையான நுண்ணூட்டங்களுடன் சரியான விகிதத்தில் புரதங்களை கலந்து சந்தையில் கொடுக்க ஆரம்பித்தோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது கர்நாடகா , ஆந்திரா உட்பட தென்இந்தியா முழுதும் விரிவுப்படுத்தி இருக்கிறோம் . நிறுவனம் தொடங்கப்பட்ட போது ரெண்டு வெரைட்டி தீவனம் மட்டும் இருந்தது. ஆனால் இன்று தீவனங்கள் மட்டும்26 வகைகள் பண்றோம்.

நுண்ணூட்டங்கள் 24 வகைகள் இருக்கு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் மத்தியில எங்களுடைய காமதேனு தீவனங்கள் பெயர் நல்லபடியாக சேர்ந்திருக்கு, அதுமட்டுமில்லாம எங்க தீவனத்தை போட்டாங்கன்னா மாடு திரும்பவும் சினைக்கு திரும்பும் என்கிற ஒரு உத்தரவாதத்தை நாங்கள் கொடுத்திருக்கிறோம். இந்த உத்திரவாதம்தான் காமதேனு கேட்டில் ஃபீட்ஸ் நிறுவனம் தலைமுறைகளாக சந்தையில் நீடித்து நிற்கிறது.”
``உங்கள் தீவனத்தில் அப்படியென்னாம் வித்தியாசம் இருக்கிறது? என்ன மாதிரியெல்லாம் தீவனத்தை உருவாக்குகிறீர்கள்?”
``BIS தரம் என்ன எடுத்துரைத்திருக்கிறதோ அந்த தரத்தில்தான் தீவனங்களை தயார் பண்ணிட்டு வருகின்றோம். போட்டியாளர்கள் கிட்ட இல்லாத சில தயாரிப்புகள் எங்களிடம் இருக்கு. உதாரணத்திற்கு மக்கள் மக்காச்சோளம் பவுடர் வாங்கி அத கூழ் காய்ச்சி மாட்டுக் ஊத்திட்டு இருந்தாங்க . இது ரெண்டு வேலையா பண்றாங்க, அதையே நாங்கள் மக்காச்சோளத்தை நன்றாக அரைத்து பெல்லட் வடிவிலேயே கொடுத்தோம் , மக்காச்சோளம் கூழ் காய்ச்சி விவசாயிகள் மாடுக்கு கொடுக்கும்போது மாட்டுக்கு வயிறு உப்புசம் வரும் , அதையும் நாங்கள் கணக்கில் வைத்து எங்கள் மக்காச்சோளத்தில் உப்பசம் வராத வகையில் தீவனத்தை கொடுக்கிறோம்.

ஐந்து வகையான புண்ணாக்கை விகிதமாக கலந்து பெல்லட் வடிவில் புண்ணாக்கு தீவனத்தை நாங்க அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதுவும் இன்னைக்கு மக்கள் மத்தியில மிக வரவேற்பு பெற்று இருக்கு , நாங்க நிறைய வித்தியாசப்படுத்தி கொண்டு வந்திருக்கிறோம், இப்ப தமிழ்நாட்டுல மாட்டு தீவனத்தோட சேர்ந்து நூண்ணுட்டங்களை விற்பனை பண்றது எங்களுடைய நிறுவனம், அதோட தாது உப்பு கட்டி விற்பனை இருக்கிறோம்.
நாங்கள் எங்கள் புதிய தீவனங்களையோ , நூண்ணூட்டங்களையோ அல்லது கோழி தீவனித்தையோ வடிவமைக்கும் முன் விவசாயிகளின் சிக்கல்களை முழுமையாக தெரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிக்கல்கள் திரும்ப வராத வண்ணம் எங்கள் பொருட்களை தயாரிக்கின்றோம். அதற்கான முழு ஆய்வுக்கூடம், வல்லுநர்கள் எங்களிடம் இருக்கின்றனர். அதுதான் எங்களுடைய பலம், நாங்கள் கன்றுக்குட்டிக்கும் தீவனம் உருவாக்கியிருக்கோம். பிராய்லர் கோழிக்கும், காடைக்கும் தீவனம் உருவாக்கியிருக்கோம்.
எந்த விதத்திலும் கால்நடை கோழி வளர்ப்பவர்கள் பாதிப்படையக்கூடாது என்பதுதான் எங்கள் இலக்கு. இதற்கு ஏற்றார்ப்போல் எங்கள் வல்லுநர்களையும் நாங்கள் தயார்படுத்துகின்றோம்.
எங்களுடைய அணுகு முறையே வித்தியாசமானது , எங்களுடைய ஆய்வுக்குழுவும், எப்போதும் இந்தியா அல்லது உலகம் முழுதும் எங்கெல்லாம் கால்நடை, கோழி வளர்ப்பு சம்பந்தமான கருத்தரங்கம், பயிற்சி நடந்தாலும் எங்கள் நிறுவனத்தின் நிபுணர்கள் அங்கே கலந்துகொள்வார்கள். இதனால் என்னவிதமான புதிய பாதிப்புகள், அதற்கான தீர்வுகள், புதிய நுட்பங்கள் ஆகியவற்றை தெரிந்துகொண்டு உடனடியாக இங்கே அவற்றை நாங்கள் சரி செய்துகொள்கின்றோம்.இந்தத்துறையில் புதிது புதியதாக என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் சிந்தித்துக்கொண்டே இருக்கின்றோம்."
உங்கள் தயாரிப்புகளை எப்படி பரிசோதனை செய்கின்றீர்கள் ? அவைகள் தரமாகத்தான் இருக்கிறது என்பதை எப்படி உறுதி செய்கின்றீர்கள்?
``ஒரு மாதத்திற்கு மூணுல இருந்து நான்கு தயாரிப்புகளை நாங்க புதுசாக சோதனை செய்துட்டே இருக்கோம். எங்கள் ஆய்வுக்குழு ஒரு பார்முலா எடுத்து அதை உருவாக்கி அதற்கான சோதனைகள் எல்லாம் சரி செய்து விவசாயிகளுக்கு மற்றும் பண்ணைகளுக்கு கொடுத்து அதை தொடர்ந்து கண்காணித்து இருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் பத்து பண்ணைகள் எங்களுடைய ஆரம்ப சோதனை முயற்சிகளுக்கு இடம் கொடுக்குறாங்க. சோ அவங்களுடைய பண்ணைகள்ல அவங்க பார்த்து சொல்ற ரிசல்ட்ட வச்சுக்கிட்டு நாங்க வந்த எங்களுடைய தாயரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி சந்தைக்கு அறிமுகம் செய்கின்றோம். ”
``பெரிய அளவில் நீங்கள் உற்பத்தி செய்கின்றீர்கள். உங்களுக்கு மூலப்பொருட்கள் சரியான நேரத்தில் கிடைக்கின்றதா ? அவற்றில் நீங்கள் சந்திக்கும் சிக்கல் என்ன?”
``எங்கள் காமதேனு கேட்டில் ஃபீட்ஸ் ஆரம்பித்து 46 வருஷம் ஆச்சு. இதுல எங்களுக்கு மூலப்பொருட்கள் பாத்தீங்கன்னா தொடர்ந்து சப்ளை பண்றது ஆரம்பத்தில் ஆறு பேர், பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள வழியே நிறைய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதால் எங்களுக்கு நிறைய சப்ளையர்ஸ் தேவை. தென் இந்தியாவுக்குள்ள இருந்து பிரதான மூலப்பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அதை பரிசோதிக்க ஒரு முறையான எஸ்ஓபி இருக்கு , இன்று எங்களுக்கு கிட்டத்தட்ட நூற்று கணக்கில் சப்ளையர்ஸ் இருப்பதால் நல்ல முறையில் நல்ல தரமான மூலப் பொருட்களை எங்களுக்கு தொடர்ந்து சப்ளை பண்ணிட்டு வராங்க. அது மட்டும் இல்லாம மக்காச்சோளம் அப்புறம் வெள்ளைச்சோளமத்தை எங்களுடைய தீவனங்களை வாங்கும் விவசாயிகள் நேரடியாக எங்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள் , இதனால் இப்போதுவரை எங்கள் மூலப்பொருள் தங்கு தடையின்றி கிடைத்துவருகிறது.
தீவனம் உள்ளே வந்தால் மட்டும் போதாது , அவற்றிவை நாங்கள் பலதரப்பட்ட சோதனைகளுக்கு உட்படுத்தி பரிசோதனை செய்வோம். ஓருஇடத்தில் சிறிய சிக்கல் வந்தாலும் சரி செய்வது கடினம், அதனால் அவற்றை பரிசோதிக்க நாங்கள் இரண்டு விசயங்களை கவனிக்கிறோம். ஒன்று வெளித்தோற்றம், மற்றொன்று கெமிஸ்ட்ரி லேப் ஆய்வுகள் . இவைகள் இரண்டையும் உறுதி செய்தபின்அவற்றை நாங்கள் பேக்டரிக்கு அனுப்புவோம், தரமான தீவனத்த உற்பத்தி பண்ணி மக்கள்கிட்ட கொடுக்கிறதுக்கு இந்த ஒரு SOPயும் எங்களுக்கு வந்து மிகவும் பலமாக இருக்கு. இன்னைக்கு இது எங்களுடைய ஒரு மிகப்பெரிய பலம்னே சொல்லலாம்.
இன்னொரு புறம் நாங்க உருவாக்கிற தீவனங்க பசுவுக்கு அந்த டேஸ்ட் பிடிக்குதா கோழி கரெக்டா தீவனத்தை கொத்தி எடுக்குதா? மூலப் பொருட்கள் சேர்க்கப்பட்டதால் அதில் என்ன மாதிரியெல்லாம் ரியாக்சன் இருக்குன்னு அப்படிங்கிறது எல்லாமே நாங்க நேரடியாக களத்திற்குச் சென்று சோதனை செய்து , எல்லா சோதனையும் சரிபார்த்தப்பிறகுதான் புதிய தயாரிப்புகளையும் நாங்கள் அறிமுகப்படுத்துகின்றோம். இவைகள் எல்லாவற்றிற்கும் ஒரு SOP வைத்திருக்கிறோம்”
டைரி கனெக்ட்
இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை டைரி கனெக்ட் எனும் மிகப்பெரிய கருத்தரங்கம் , மற்றும் பயிலரங்கம் நடத்திக்கிட்டு இருக்கோம். இதுவரைக்கும் ஒரு அஞ்சு மாநாடு நடத்தி இருக்கிறோம், பால் உற்பத்தி நிறுவனத்திற்கும் பால் உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கும் வந்து ஒரு பாலமாக அமைய இந்த கான்பரன்ஸ் நடத்துகின்றோம். அதேபோல் பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு அவங்க என்ன எதிர்பார்க்கிறார்கள் அப்படிங்கிற விஷயங்களை இந்தமாநாட்டின் வழியே அவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். இப்படி எல்லாமே கால்நடை, கோழி விவசாயிகளை மையப்படுத்தியே நாங்கள் இயங்கி வருகின்றோம்.”
`பருவநிலை மாற்றத்தால் கால்நடை உற்பத்தியாளர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? அவற்றை நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள்? ”
`பருவநிலை காரணமாக பால் வரத்து சமீபகாலத்தில் குறைந்துவிட்டது. பால் வளர்ப்பு முன்பு போல லாபமா இல்லை என்றெல்லாம் நிறைய பேர் பேசிட்டுதான் இருக்கோம். எப்பவுமே குளிர்கால சீசன்ல பால் அதிகமாக கிடைக்கும், சமீப காலமா ஒரு சில இடத்தில் பாத்தீங்கன்னா குளிர்காலத்தில் பால் கொஞ்சம் டிமான்ட்ல இருந்தது , ஆனால் கோடைக்காலத்தில் சில இடங்களில் பால் உற்பத்தி அதிகமா இருந்தது.இவற்றையும் நாங்கள் ஆராய்ந்துதான் வருகின்றோம். இந்த கால நிலை மாற்றத்தினால் நாங்க வாங்குற மூலப்பொருள் கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. தட்டுப்பாடு அதிகரிச்சதால் அதன் விலையும் அதிகரிச்சது இதனால் விலையை நிர்ணியிப்பதும் சில சிக்கல்கள் இருக்கிறது. இதனால் குறைந்த தீவனமாக இருந்தாலும் ஊட்டச்சத்து கிடைப்பது குறித்தும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்.”
``சமீபத்தில் கால்நடைகளுக்கு லட்டு ஒன்றை அறிமுகப்படுத்தீனீர்கள்? அது என்ன ? அதற்கு வரவேற்பு இருந்ததா?”
``தீபாவளிக்கு நாம மட்டும்தான் லட்டு சாப்பிடுறோம். ஏன் பசுவுக்கு என ஒரு லட்டு தரக்கூடாது. அதுங்களுக்கும் ஒரு வித்தியாசம் வேணும்ல, அதனால கால்நடைகளையும் சந்தோஷப்படுத்தி பாக்கணும் முடிவு பண்ணி இந்த லட்டை அறிமுகம் செய்தோம். நிறைய வரவேற்பு கிடைத்தது. அதனால இன்னமும் அறிமுகம் செய்யலாம்னு இருக்கிறோம்.”
``இப்போது என்ன மாதிரியான ஆய்வுகளை செய்து வருகிறீர்கள்? இதனால் கால்நடைகளுக்கு என்ன லாபம்?”
``மாட்டுக்கு மடி நோய் வந்துவிட்டால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அவற்றை நாங்கள் எப்படி குணமடைய செய்வது என்று ஆராய்ந்து வருகின்றோம், முழுமையான சித்த/ஆயூர்வேத முறையில் ஒரு பார்முலா ஒன்றை ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் இதை சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகளை பொருளாதார இழப்பீட்டை நிறுத்துவது குறித்தும் செயல்பட்டு வருகின்றோம். பறவைகளுக்கு கர்ப்பப் பரிசோதனை செய்யும் கிட் ஒன்றையும் அறிமுகப்படுத்த உள்ளோம்.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஐம்பதாவது ஆண்டு என்பது பெருங்கனவு அவற்றை நாங்கள் விரைவில் அடைய உள்ளோம்.அந்த நேரத்தில் விவசாயிகளின் பொருளாதார வளத்தினை இன்னமும் மேம்படுத்தவேண்டும் அதற்காக நாங்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு சிறந்த தயாரிப்புகளை மக்களுக்கு கொடுத்து அவர்களோடு நாங்களும் வளரவேண்டும் என்பதே எங்கள் ஆவல்”
(வரும்..!)