செய்திகள் :

Suriya: வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது?- `ரெட்ரோ'வின் அடுத்து அப்டேட்!

post image
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியின் 'ரெட்ரோ' படத்தின் டைட்டில் டீசர் கடந்த டிசம்பரில் வெளியாகி, மிகுந்த வரவேற்பை அள்ளியது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
சூர்யா
சூர்யா - கார்த்திக் சுப்புராஜ்.

இந்தப் படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டேவை தவிர, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், 'டாணக்காரன்' தமிழ், எனப் பலரும் நடித்துள்ளனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு அந்தமானில் நடந்திருக்கிறது. ஒரு பாடலுக்கு ஸ்ரேயா ஆடியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் 'ஜகமே தந்திரம்' ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கடந்த டிசம்பர் மாதத்திற்கு முன் 'ரெட்ரோ' 2025 பொங்கலுக்கு வெளியாகும் என்ற பேச்சு இருந்தது. இந்த நிலையில் தான் டீசர் வெளியானது. அதன்பின் வருகிற மே முதல் தேதியில் படம் வெளியாகும் என்பதை அறிவித்திருந்தனர். படத்தின் எடிட்டிங் வேலைகளும், பின்னணி இசையும் பரபரக்கிறது. மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் முதல் சிங்கிள் வெளிகிறது. அனேகமாக அது ஸ்ரேயா ஆடிய பாடலாக இருக்கும் என்றும் தகவல். வரும் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்ரோ

'ரெட்ரோ'வை முடித்துக் கொடுத்துவிட்டு, இப்போது ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் மும்முரமாக இருக்கிறார் சூர்யா. கோவை மற்றும் சென்னையில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதிலும் கோவையில் ஏழு வாரங்கள் தொடர்ந்து படபிடிப்பு நடந்திருக்கிறது. இப்போது கடந்த 31ம் தேதியில் இருந்து மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மார்ச் மாதத்தோடு இதன் படப்பிடிப்பு நிறைவடையும் என்கின்றனர். எப்போதும் ஒரு படத்தை முடித்து விட்டு, அடுத்த படத்திற்கு வருவது சூர்யாவின் பாணி. அதன் படி 'சூர்யா 45' முடித்துவிட்டு, 'வாடி வாசல்' படத்தை ஆரம்பிக்கிறார் சூர்யா.

Baby & Baby: "சீக்கிரம் கமிட் ஆகுங்க சார்..." - மேடையில் வைத்து ஜெய்யைக் கலாய்த்த யோகி பாபு!

யுவராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் பேபி & பேபி. அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்து... மேலும் பார்க்க

Baby & Baby: "'இசை வள்ளல்' டைட்டில் எனக்கே ஓவாராதான் இருக்கு; ஆனா..." - டி.இமான் பளீச்

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் நடித்திருக்கும் படம் பேபி & பேபி. பிப்ரவரி 14-ம் தேதி ரீலீஸ் ஆகும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு ... மேலும் பார்க்க

Baby & Baby: ``அஜித், விஜய்க்கு ஜோடியா நடிச்சவங்கதான் எனக்கும் ஜோடி..." -நடிகர் சத்யராஜ்!

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் நடிகர் ஜெய், யோகி பாபு, சத்யராஜ், கீர்த்தனா, சாய் தன்யா, பிரக்யா நக்ரா, இளவரசு, ஸ்ரீமன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி, சிங்கம்புலி, தங்கதுரை, ராமர், ர... மேலும் பார்க்க

Samantha: சென்னை அணியை வாங்கிய சமந்தா; இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

நடிகை சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவை டேட்டிங் செய்வதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா சமீபத்தில் உலக பிக்கில் பால் லீக்க... மேலும் பார்க்க

STR 50: `நீங்க இல்லாம நான் இல்ல' - 50வது படத்தை தயாரிக்கும் சிம்பு - அடுத்தடுத்த அப்டேட்ஸ்

சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் படம் தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.சிம்பு நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு `பத்து தல' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தத... மேலும் பார்க்க

Vetrimaran: 'அரசியல் ஆகிடக்கூடாது...' - தவெக விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன்; பின்னணி என்ன?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டாமாண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு மதுரையில் தவெக நிர்வாகிகளால் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர்... மேலும் பார்க்க