செய்திகள் :

Thug Life : 'தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கப்போகிறது!' - நாசர்

post image

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4)'தக் லைஃப்'  படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர்.

‘தக் லைஃப்’ படத்தில்...
‘தக் லைஃப்’ படத்தில்...

இதில் கலந்துகொண்டு பேசிய நாசர், " நாயகன் படத்தின் மூலமாகத்தான் முதன் முதலில் கமல் சருடனும், மணி சாருடனும் அறிமுகமானேன்.

அவர்கள் இருவரும் சேர்ந்து 38 வருடங்கள் கழித்து படம் பண்ணும்போது அந்தக் கூட்டணியில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கப்போகிறது.

மணி சார், கமல் சார், ரஹ்மான் சார் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தம் இருக்கும். ஏனென்றால் இவர்கள் மூவரும் அவர்களுக்கென்று ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

மணி ரத்னம், கமல், ரஹ்மான்
மணி ரத்னம், கமல், ரஹ்மான்

சிறப்பாக இந்தப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு அழுத்தம் இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. இந்தப் படம் இந்திய சினிமாவிற்கு நிச்சயம் பெருமையாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Thug Life: 'என் மகள் குறுகிய காலம்தான் பணியாற்றினார்; ஆனால்...' - மணிரத்னம் குறித்து நெகிழும் குஷ்பூ

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் ... மேலும் பார்க்க

Thug Life Review: கமல்ஹாசன் - சிம்பு - மணிரத்னம் கூட்டணியில் `நாயகன்' மீண்டும் வராரா? ஏமாற்றுகிறாரா?

காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரங்கராய சக்திவேல் (கமல் ஹாசன்) ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் தாதாவாக டெல்லியை ஆளும் 'தக்'. ஒரு போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சக்திவேல் தப்பிக்க உதவுகிறான் சிறுவன் அமரன் (... மேலும் பார்க்க

பழனி முருகன் கோவில்: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி தரிசனம் | Photo Album

பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிசனம்பழனி முருகன் கோவிலில் தரிச... மேலும் பார்க்க

`எங்க ரசிகர்கள்லயே சிலருக்கு இதுபத்தி தெரியாம இருக்கு!’ - பவுண்டேஷன் மூலம் படிப்புக்கு உதவும் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தமிழகமெங்கும் முழுக்க இருக்கும் தன்னுடைய ரசிகர்களின்பிள்ளைகளின் உயர்படிப்புக்குசத்தமில்லாமல் ஒவ்வொரு வருடமும் உதவி செய்து வருகிறார். பிளஸ் டூ தேர்வில் 85 சதவிகிதத்துக்கு மேல் எடுத்த... மேலும் பார்க்க