செய்திகள் :

Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..!

post image

'அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்று ஆரம்பித்து 'மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்' என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது.

இது 170 மில்லியன் அமெரிக்க டிக் டாக் பயனாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையில், நேற்று செயல்பாட்டிற்கு வந்த டிக் டாக் தடை வெறும் பதினான்கே மணிநேரத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

'டிரம்பிற்கு நன்றி!'

இதுகுறித்து நேற்று டிரம்ப் கூறுகையில், "நான் அதிபராக நாளை பதவியேற்றதும் இந்தத் தடை செயல்பாட்டிற்கு வரும் நேரத்தை தள்ளிப்போடும் ஒப்பந்தத்தில் கையெழுத்துவிடுவேன். இதனால், டிக் டாக் எந்தவொரு தடையும் இல்லாமல், மீண்டும், அமெரிக்காவில் செயல்படலாம்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, டிக் டாக்கை அமெரிக்க ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியிருந்த ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் நிறுவனம் மீண்டும் கொண்டுவந்துள்ளது. டிக் டாக் நிறுவனம் மீண்டும் டிக் டாக்கை அமெரிக்காவில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. இதற்காக, டிக் டாக் நிறுவனம் 'டிரம்பிற்கு நன்றி' தெரிவித்துள்ளது.

Doctor Vikatan: கால்சியம் மாத்திரை எடுத்தால் கிட்னி ஸ்டோன் வருமா?

Doctor Vikatan: சிலவித உடல்நல பிரச்னைகளுக்காகமருத்துவப் பரிசோதனைக்குச்சென்றிருந்தேன். எனக்கு கால்சியம் சத்துக் குறைபாடு இருப்பதாகச் சொல்லி மருத்துவர் கால்சியம் சத்து மாத்திரைகளைப் பரிந்துரைத்தார். கால... மேலும் பார்க்க

தயாராகும் TVK - ADMK-வின் புது Plan -காலியாகும் சீமானின் கூடாரம்? Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்! * மக்களின் எதிர்பாப்புகள் என்னென்ன? * வக்ஃப் மசோதா உள்ளிட்ட 16 மசோதாக்கள் தாக்கல் ஆகிறதா? * கும்பமேளா சம்பவம் குறித்து ப... மேலும் பார்க்க

US Dollar: ``டாலரை மாற்ற நினைத்தால்..'' -இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் சொல்வதென்ன?

ட்ரம்ப் என்ற வார்த்தையே இனி 'அதிரடி' என மாறிவிடும் போலும். அடுத்த அதிரடியை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக தற்போது இறக்கியுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அவர் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், "பிரி... மேலும் பார்க்க

Doctor Vikatan: அரிசி தின்னும் பழக்கம்... உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நம்மில் பலருக்கும் அரிசியை பச்சையாக சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு. தினமும் சிறிது அரிசியைபச்சையாகச் சாப்பிடுவேன். சமீபத்தில் 12 வயது சிறுமி ஊற வைத்த அரிச... மேலும் பார்க்க

``காந்தி திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டார்'' -ஆளுநர் ஆர்.என்.ரவி

நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்... மேலும் பார்க்க