2034-இல் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை அமல்! - நிர்மலா சீதாராமன்
Tilak :'அது நல்ல முடிவல்ல; ஆனாலும் எடுத்தோம்!' - திலக்கின் ரிட்டையர் அவுட்டை விளக்கும் ஜெயவர்த்தனே
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி லக்னோவில் நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டியில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

'திலக் வர்மா ரிட்டையர் அவுட்!"
மும்பை அணி சேஸிங் செய்த போது 19 வது ஓவரில் திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக வைத்தார்கள். இந்த முடிவு இப்போது பேசுபொருளாகியுள்ளது. திலக் வர்மாவை ரிட்டையர் அவுட் ஆக செய்ததை பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கி பேசியிருக்கிறார்.
'பயிற்சியாளர் ஜெயவர்த்தனே விளக்கம்!'
ஜெயவர்த்தனே பேசுகையில், ''திலக் வர்மா நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். சூர்யாவுடனான அவரின் பார்ட்னஷிப் முறிந்த பிறகு அவரால் பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. அவர் முயன்று பார்த்தும் முடியவில்லை. அவர் க்ரீஸில் போதுமான நேரத்தை செலவிட்டிருந்தார். அப்படியிருக்க அவர் பெரிய ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். ஆனால், அவரால் முடியவில்லை.

எங்களுக்கு அந்த இடத்தில் துடிப்பாக பெரிய ஷாட்களை ஆட கூடிய பேட்டர் தேவைப்பட்டார். அதனால்தான் சாண்ட்னரை இறக்கினோம். அதை அவ்வளவு சிறப்பான முடிவென சொல்லமாட்டேன். ஆனால், அது சூழல் கருதி எடுக்கப்பட்ட முடிவு.' என்றார்.