செய்திகள் :

TN Budget 2025: தொழிற்பூங்கா முதல் மெட்ரோ ரயில் வரை... மதுரைக்கென 17 திட்டங்கள்!

post image

"மதுரை மக்களின் நீண்டகால கோரிக்கைகள் பலவற்றை தமிழக நிதிநிலை அறிக்கை நிறைவேற்றியுள்ளது...." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " மதுரையை பண்பாடு , தொழில் வளர்ச்சி, அடிக்கட்டமைப்பு மேம்பாடு , அடுத்த கட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் நலன் என்கிற ஐந்து மைய அச்சுகளையும் இணைத்து சிந்தித்து 17 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வைகை நதிக்கரை மேம்பாடு , மாநகராட்சி சாலைகள் மேம்பாடு, தொழில் வளர்ச்சி மூலான வேலை வாய்ப்புகள், அகர மொழிகளின் அருங்காட்சியகம், பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், காலநிலை மாற்றத்திற்கான மதுரைக்கான தேவைகள், மதுரை மெட்ரோ என அறிவிப்புகள் சட்டமன்றத்தில் வெளியாகியுள்ளன.

275 கோடி மதிப்பீட்டில் 1000 மாணவிகள் பயன்பெறும் தங்கிப் பயிலும் நவீன வசதிகளுடன் கூடிய 3 விடுதிகள், மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் சாலைகள் தரம் உயர்த்துதல்,

வைகை ஆற்றங்கரையில் மாநகராட்சிப் பகுதியில் கலக்கும் கழிவுநீரை தடுக்கும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நடைபாதைகள், தெருவிளக்குகள், பூங்காங்கள் உருவாக்கம். மதுரை திருப்பரங்குன்றத்தில் கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறும் வகையில் விடுதி வசதிகளுடன் கூடிய புதிய தொழிற் பயிற்சி மையம்.

ரூ 250 கோடி முதலீட்டில் 10,000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மதுரை மேலூரில் காலணி தொழிற்பூங்கா, 2000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் மதுரை மாவட்டம் கருத்தப் புளியம்பட்டியில் புதிய தொழிற்பேட்டை,

போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம், உயர்தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உறுதிபடுத்தும் துணை திறன்மிகு மையம், மதுரை அரிட்டாபட்டி போன்ற பல்லுயிரினங்கள் வாழும் பகுதிகளைப் பாதுகாக்க ரூ 1 கோடி நிதி. மதுரை மாநகரத்திற்கு புதிய 100 மின் பேருந்துகள், மதுரை திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான ரூ 11,368 கோடி மதிப்பிலான மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் உடனடித் துவக்கம், மதுரை - சிவகங்கை மரபு சார் சுற்றுலா வழித்தடம், 48 கிலோமீட்டர் மதுரை வெளிவட்டச்சாலை அமைத்திட திட்ட அறிக்கை

சட்டசபையில் தங்கம் தென்னரசு - நிதிநிலை அறிக்கை

75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் புதிய திட்டம், மதுரை உள்ளிட்ட 11 நகரங்களுக்கென தனியான வெப்ப அலை செயல்திட்டங்கள், ரூ.10 கோடி மதிப்பீட்டில் மூத்த குடிமக்களுக்கான அன்புச் சோலை மையம், மதுரையில் அகர மொழிகளின் அருங்காட்சியகம் என இத்தகைய தனித்துவமான , அவசியமான மதுரைக்கான 17 திட்டங்களை நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மதுரை மக்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Russia - Ukraine War: ``போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தான்; ஆனால்..'' - புதின் கேட்கும் 3 கேள்விகள்!

இந்த வாரம், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்க - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உடனடி 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்.அடுத்ததாக, அமெரிக்க அதிகாரிகள் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் அங... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் பருமனுடன் உள்ளவர்கள் ஆரோக்கியமற்றவர்கள் என்று அர்த்தமா?

Doctor Vikatan: என் வயது 35. நான் இளவயதிலிருந்தேசற்று பருமனான உடல்வாகு கொண்டவள்தான். அதாவது சராசரியைவிட பருமனான தோற்றம் கொண்டவள். வாக்கிங், சைக்கிளிங் என தினமும் ஏதோ ஓர் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வ... மேலும் பார்க்க

TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறிக்கை..." - சீமான்

2026-ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டாக இருந்தது. மகளிர், மாணவர்கள், மருத்துவத்துறை, நீர்வளத் துறை, தொழில்துறை எனப் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெ... மேலும் பார்க்க

``புதிய பொறுப்பாளரை ஏற்க முடியாது'' - கொதிக்கும் புதுக்கோட்டை மாநகர திமுகவினர்... பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாநகர தி.மு.க செயலாளராக இருந்த அமைச்சர் ஆ.செந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கே.என்.நேரு ஆதரவாளராக இவர் இருந்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அந்த ப... மேலும் பார்க்க

Tasmac: `ரூ.1000 கோடி முறைகேடு' ED குற்றச்சாட்டு... அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்வதென்ன?

டாஸ்மாக் நிர்வாகத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ... மேலும் பார்க்க

TN Budget 2025: `நிறைய புதிய திட்டங்களை அறிவிச்சுருக்காங்க, ஆனா...' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின... மேலும் பார்க்க