செய்திகள் :

TNBudget 2025: 'பட்ஜெட்டில் 'ரூ' மாற்றம் எதற்கு?'- முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

post image
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை தீவிரமாக எழுந்துள்ளது.

தமிழ்ப்பற்றைக் காண்பிக்கும் விதமாக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அவ்வகையில் இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணத்தில் இந்திய ரூபாய்க்கான ₹ குறியீட்டுக்கு பதில், ரூ எனத் தமிழ் எழுத்து பயன்படுத்தப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்குப் பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

2025- 2026 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்

'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் இருக்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அவ்வகையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் 'உங்களில் ஒருவன்' நிகழ்ச்சியில் பட்ஜெட் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்திருக்கிறார்.

அதில், 'ரூ' குறியீடு மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, "மொழிக் கொள்கையில் நாம எந்த அளவிற்கு உறுதியாக இருக்கோம் என்பதைக் காட்ட பட்ஜெட் தலைப்பில் 'ரூ' குறியீட்டை வைத்திருந்தோம். தமிழைப் பிடிக்காதவங்க, அந்த விஷயத்தை பெரிய செய்தியாக்கிட்டாங்க.

ஒன்றிய அரசிடம் பேரிடர் நிதி தாருங்கள், பள்ளிக் கல்வி நிதியை விடுவிங்க என தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்கைகள் வைத்திருந்தோம். அதற்கெல்லாம் பதில் சொல்லாதவர்கள், 'ரூ' குறியீடு பற்றிப் பேசுகிறார்கள். அவங்களே பல பதிவுகளில் 'ரூ' வைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். வெளிநாடுகளில்கூட 'Rs' என்றுதான் பயன்படுத்துகிறார்கள். 'ரூ' குறியீட்டை மாற்றியதுதான் இவர்களுக்குப் பெரிய பிரச்னையாகத் தெரிகிறது. மொத்தத்தில் இந்திய அளவில் நம்ம பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்'" என்று பேசியிருக்கிறார்.

மேலும், பட்ஜெட் மீதான விமர்சனங்கள் குறித்து, “ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வந்தால் அதைப் பரிசீலிக்கலாம். நெகட்டிவாக சொல்ல வேண்டும் என்பதற்காகவே சிலர் விமர்சிப்பது, அரசு மீது உள்ள வன்மம் மட்டுமே தெரிகிறது. உருப்படியாக அதில் ஒன்றுமே இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்.

அடையாறு சீரமைப்பு: `மீண்டும் ரூ.1500 கோடி' - ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் நிதி; என்னதான் நடக்கிறது?

மனித வரலாற்றில் ஒவ்வொரு நதியுமே ஒவ்வொரு கலாசாரத்தின் தோற்றுவாயாகச் செயல்படுகிறது. நதிக்கும் மனித மரபுகளுக்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது. அப்படிப்பட்ட ஒரு நதிதான் சென்னையின் அடையாளமான அடையாறு. இன்றை... மேலும் பார்க்க

`ஸ்டாலினாலும் வைகோவாலும் நான் இழந்தது நிறைய..!' - கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஓப்பன் டாக்

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்திலிருப்பவர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். ஆனால் இதுவரை எம்.எல்.ஏ., எம்.பி.,என எந்தப் பதவியையும் வகித்ததில்லை. ”வேற ஒருத்தனாஇருந்தா இந்நேரத்துக... மேலும் பார்க்க

'ஏஐ தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் சீனா' - இந்தியாவின் நிலை என்ன?

சமீபத்தில் டீப்சீக் என்ற நுண்ணறிவு செயலியை சீனா அறிமுகம் செய்தது. இது சிலிகான் பள்ளத்தாக்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இதற்கு அதுவரை செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்கா மட்ட... மேலும் பார்க்க

TN Budget 2025: 'சொன்னதைச் செய்வோம் என்பது காற்றில் போச்சு' - பட்ஜெட் குறித்து தலைமைச் செயலக சங்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.2026ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டா... மேலும் பார்க்க

`₹ குறியீடு கொண்ட கலைஞர் நினைவு நாணயங்களை வீசி எறிந்து விடுமா திமுக?' - அன்புமணி கேள்வி

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் எழுந்த சர்ச்சையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு அலை தீவிரமாக எழுந்துள்ளது.தமிழ் பற்றைக் காண்பிக்கும் விதமாக தி.மு.க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ... மேலும் பார்க்க

TN Budget 2025: "திமுக-வுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள்..." - அண்ணாமலை விமர்சனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.2026ம் ஆண்டு தேர்தல் நெருங்குவதால் இந்த பட்ஜெட் பெரிதும் கவனிக்கத்தக்க பட்ஜெட்டா... மேலும் பார்க்க