செய்திகள் :

Toilet Hygiene: ஒரு சதுர இன்ச்சில் 50 பாக்டீரியாவா.. - `கழிப்பறை சுத்தம்' எப்படி பராமரிக்கணும்?

post image

னிதனுக்குப் பல்வேறு நோய்கள் வர முக்கியக் காரணமே சுத்தமின்மைதான். எல்லாவற்றிலும் சுத்தம் பார்க்கும் நாம், கவனக்குறைவாக இருப்பது கழிப்பறை சுத்தத்தில்தான். 'இதெல்லாம் பெரிய விஷயமா' என்று அசட்டையாக விட்டதால்தான் அந்தக் காலத்தில் காலரா முதல் ஏராளமான கொள்ளைநோய்கள் ஏற்பட்டு, கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர்.

வளர்ந்த நாடுகளில் குழந்தைகளுக்கு கழிப்பறையை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சொல்லித்தருகிறார்கள். நமது நாட்டில் 'இதை எல்லாமா சொல்லித்தருவார்கள்' எனக் கழிப்பறை சுத்தம் பற்றிப் பலரும் பேசத் தயங்குவதால், அங்கிருந்து கிருமிகள் பல்கிப் பெருகி, பல்வேறு நோய்களைப் பரப்புகின்றன.

நமது ஊரில் பொதுக் கழிப்பறையின் நிலை மிகவும் மோசமாக இருக்க, மக்களும் ஒரு காரணம். நம் வீட்டுக் கழிப்பறையாக இருந்தாலும், பள்ளி, கல்லூரி, அலுவலகம் மற்றும் பொது இடங்களில் இருக்கும் கழிப்பறையாக இருந்தாலும் சுத்தமாக வைத்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் பொறுப்பு.

Toilet hygiene
Toilet hygiene

* காற்று வெளியே செல்லும் அளவுக்குக் காற்றோட்டமான வென்டிலேட்டர் இருக்க வேண்டும்.

* கழிப்பறையில் பயன்படுத்திய நீர் வெளியேறும் வகையில், சிறப்பான கழிவு நீர் வழித்தடங்களை அமைக்க வேண்டும்.

* மலம், சிறுநீர் கழிக்கத் தனி அறையும், குளியலுக்குத் தனி அறையும் அமைப்பதுதான் நல்லது.

* ஒருவேளை இரண்டும் ஒரே அறையில் இருந்தால், கழிப்பறைக்கும் குளியலறைக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் அமைப்பது நல்லது.

* கழிப்பறைக்கு அருகில் சமையல் அறை அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* கழிப்பறையில் ஒரு குப்பைத் தொட்டி வைக்க வேண்டும்.

குறைந்தபட்சம் மூன்று நாள்களுக்கு ஒரு முறையாவது 15 நிமிடங்கள் செலவுசெய்து கழிப்பறை முழுதையும் சுத்தம்செய்வது அவசியம். கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்காகக் கடையில் விற்கப்படும் பிரத்யேகத் திரவங்கள் அல்லது பிளீச்சிங் பவுடர்கள் பயன்படுத்தலாம். திரவமாக இருந்தாலும், பிளீச்சிங் பவுடராக இருந்தாலும், தண்ணீரில் கலந்து தெளித்து, பிரஷ் மூலம் தேய்த்துக் கழுவ வேண்டும். அதிக அளவு பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தினால், பாக்டீரியா அதை எதிர்கொள்ளும் சக்தியைப் பெற்றுவிடும். எனவே, ஒவ்வொரு வாரமும் இரண்டு முறை சீராகக் கழிப்பறையைச் சுத்தம் செய்துவந்தாலே போதுமானது.

Toilet hygiene
Toilet hygiene

இரண்டு கப் தண்ணீர், கால் கப் டெட்டால் சொல்யூஷன், ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் மூன்றையும் சேர்த்து, நன்றாகக் கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பிக்கொள்ளவும். வெஸ்டர்ன் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் இந்த ஸ்ப்ரேவை அடிக்க வேண்டும். பின்னர், சுத்தமான பருத்தித் துணியால் துடைத்துவிடலாம்.

* கை, கால்கள் மற்றும் சிறுநீர், மலம் கழித்த உறுப்புகளைத் தண்ணீரால் நன்றாகச் சுத்தம்செய்ய வேண்டும்.

* சோப் அல்லது கிருமிநாசினி பயன்படுத்தி, மீண்டும் ஒரு முறை விரல் இடுக்குகளைச் சுத்தம்செய்ய வேண்டும்.

* கழிப்பறையில் இருக்கும் டேப்பை, தண்ணீர் பயன்படுத்திச் சுத்தம் செய்ய வேண்டும்.

toilet hygiene
toilet hygiene

* கழிப்பறையை விட்டு வெளியே வரும் முன், கை,கால்களின் ஈரத்தைத் தூயப் பருத்தித் துணி அல்லது டிஷ்யூ பேப்பரால் நன்கு துடைக்க வேண்டும்.

* டிஷ்யூ பேப்பர்களைச் சரியாகக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

நன்கு சுத்தமான கழிப்பறையில் ஒரு சதுர இன்ச் பரப்பில் குறைந்தது 50 பாக்டீரியா இருக்கிறதாம். சரியான பராமரிப்பு இல்லை என்றால் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: வைரல் வீடியோ.. Jumping Jacks பயிற்சி செய்தால் ஹார்ட் அட்டாக் வருமா?

Doctor Vikatan: ஜம்ப்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks) எனப்படுகிற உடற்பயிற்சியைச் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர், ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்த வீடியோ காட்சியை சமீபத்தில் செய்திகளில் பார்த்தேன். ஜம்ப்ப... மேலும் பார்க்க

Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரை விட்டு அவசரமாக வெளியேறும் சுற்றுலா பயணிகள்; உதவும் உமர் அப்துல்லா

பகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பின், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் வேக வேகமாக சொந்த மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் சில போ... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல் (Pahalgam Attack) நடந்துள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``எங்களுக்கு தொடர்பில்லை, இந்திய அரசுதான் காரணம்..'' - பாகிஸ்தான் அமைச்சர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் (Pahalgam Attack) நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் இந்த வேளையில், 'எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை' என்று பாக... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாகிஸ்தான் வான் வழி விமான பயணத்தை தவிர்த்த மோடி.. காரணம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின், சவுதி அரேபியாவின் அரசு பயணத்திலிருந்து பாதியிலேயே திரும்பிவிட்டார் பிரதமர் மோடி. இன்று காலை அவர் இந்தியா திரும்பியதும் புது டெல்லி விமான ... மேலும் பார்க்க

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமல் நேற்று பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இணையான மிகப்பெரிய தாக்குதல் இது. இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் தாக்குதலில் 29 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று, இ... மேலும் பார்க்க