வயநாடு: ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த பரிதாபம்; வனத்துறையின் பதில் என்ன?
Traffic: சென்னை, பெங்களூரு இல்லை; இந்தியாவின் மெதுவான நகரம் இதுதான்!
போக்குவரத்து நெரிசல் காரணமாக மிக மெதுவாக நகரும் நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
டாம் டாம் ட்ராஃபிக் இண்டெக்ஸ் என்ற டச்சு இருப்பிட தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கொல்கத்தாவில் 10 கிலோமீட்டர் தொலைவை கடப்பதற்கு 34 நிமிடங்கள் 33 வினாடிகள் ஆகிறதாம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-02/5546c4f5-7211-4973-bf1d-0877f61991f8/huge_jam_from_handia_to_bhati_1565209464.jpeg)
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது கொலம்பியாவில் உள்ள பாரன்குவிலா என்ற நகரம். அங்கு 10 கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க சராசரியாக 36 நிமிடங்கள் 6 வினாடிகள் ஆகுமாம்.
பாரன்குவிலா மெதுவான நகரமாக இருந்தாலும் நெரிசல் குறியீட்டில் 16-வது இடத்தில் உள்ளது. ஆனால் கொல்கத்தா நெரிசல் குறியீட்டில் 169-வது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவின் சராசரி வேகம் மணிக்கு 14.5 கிலோமீட்டர். பாரன்குவிலாவைப் பொருத்தவரை 21.6 கிமீ/மணி.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-09/8ee00523-3063-4d9f-892c-da14e226587e/download.jpg)
கொல்கத்தாவைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை நிரப்புவதும் ஒரு இந்திய நகரம்தான். பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தொலைவைக் கடக்க சராசரியாக 34 நிமிடம் 10 வினாடிகள் ஆகுமாம்.
இந்த பட்டியலின் டாப் 10 இடத்தில், மற்றொரு இந்திய நகரமான புதுடெல்லி இடம்பெற்றுள்ளது. டெல்லியில் 10 கிலோமீட்டரைக் கடக்க 23 நிமிடங்கள் ஆகுமாம்.
சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலைத் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட 500 நகரங்களில் 76% நகரங்களின் சராசரி வேகம் குறைந்துள்ளது. இது உலகம் முழுவதும் பெரு நகரங்களின் போக்குவரத்து நெரிசல் மோசமடைவதைக் காட்டுகிறது.