பாகிஸ்தான் ஏவுகணைகளை அசால்டாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பு
Travel Contest : யமுனை ஆற்றிலே, ஈரக் காற்றிலே! - புல்லரிக்க வைத்த மதுரா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பல இடங்களுக்கு எனது விருப்பப்படி பயணம் செய்பவள் நான். எப்போதும் போல ஒரு அழகிய மாலைப் பொழுதில் தான் “மதுரா” சென்றேன். அதற்கு முன்பாக டெல்லியில் இருந்து புறப்பட்டேன்.
டெல்லியிலிருந்து மதுராவிற்கு சென்றடைய கிட்டத்தட்ட 3மணி நேரத்திற்கு மேலாக ஆகும். எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் தான் சாலையிலேயே தொடர்ந்துப் பயணித்துக் கொண்டிருந்தேன்.
”மதுரா”- மேற்கு உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு நகரமாக அமைந்துள்ளது. இது ஆக்ராவிற்கு அருகில் யமுனை போப் பகுதியில் அமைந்துள்ளது.
“கிருஷ்ணர்” என்ற பெயரைக் கேட்டாலே எப்போதுமே எனக்குள் ஒரு வசீகரமாகவே உணர்வேன். அப்படி,எனக்குள் வசீகரமாக இருக்கும் இந்த கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கே சென்று அவரை நேரில் பார்த்த சுவாரஸ்யம் அடைந்து, பிறகு அவர் இடத்திலிருந்தே அவரை கொண்டாடிய ஒரு அழகான அனுபவங்களை இந்த ஒரு பயணக் கட்டுரையின் மூலமாக பகிர்கிறேன்.

கிருஷ்ணர் என்பவர் இந்து சமய கடவுளாவார்.இவர் விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒருவராக வைணவர்களால் கருதப்படுகிறார்.
எனது சிறு வயதிலிருந்தே என்னுடைய தாத்தா திரு.ஞானசம்பந்தன் மற்றும் எனது பாட்டி திருமதி.சரோஜா இருவருமே கிருஷ்ணரைப் பற்றி என்னிடம் நிறையத் தகவல்களை கூறிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் வீட்டிலும் “பகவத் கீதை” இருக்கின்ற வாசகங்கள் மாட்டியிருக்கும்.
திடீரென்று “கிருஷ்ணர்” பற்றி ஒரு நாள் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணர் கதைகள் இந்து மதத்தில் பரவலாக காணப்படுகின்றது.
கிருஷ்ணர் மதுராவில் பிறந்ததாக கூறுகிறார்கள். ஆனால், கிருஷ்ணர் அங்குதான் பிறந்தார் என்பதற்கு சான்றுகள் இல்லை என்றாலும், எனது தாத்தா என்னிடம் சில கதைகள் மற்றும் இதிகாசங்களைக் கூறும்போது, அவரது பிறப்பிடம் “மதுரா” என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டேன்.
பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டிரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என 5 ஆழ்வார்கள் 50 பரசுரங்கள் பாடிப் போற்றி வணங்கிய இடம்.

அயோத்யா,மதுரா,மாயா,காசி,காஞ்சி,அவெந்திகா,புரித்வாராவதி சைவ சப்தைதே மோகஷதாயிகா என்று குறிப்பிடப்படும் 7 மோஷம் அருளும் தலங்களில் மதுராவும் ஒன்று.
மதுராவிலிருந்து 11 கிமீ தூரத்தில் தான் பிருந்தாவன் அமைந்துள்ளது. ஆனால், அங்கே நான் செல்லவில்லை.. கிருஷ்ணர் பிறந்த கோவிலின் அருகே சில மசூதிகளைப் பார்த்தேன்.
அங்கு ஒருவரிடம், 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் மதுராவை ஆட்சிச் செய்தனர், பிறகு,எப்போது இது புனித இடமாக மாறியது எனக் கேட்டேன்.
இடைப்பட்ட சில வரலாற்றுத் தகவல்களை கூறி, 1965- ஆம் ஆண்டின் போது மீண்டும் கிருஷ்ணர் ஆலயம் கட்டப்பட்டது என்று பதிலளித்தார். இங்கே, கிருஷ்ணரின் ஜென்ம பூமியில் கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம், துவாரகாநாத் ஆலயம்,கீதா மந்திர் உள்ளிட்ட பல ஆலயங்கள் உள்ளன. முதலில் ஜென்மாஷ்டமி ஆலயத்திற்குச் சென்றேன்.

காலப்போக்கில் இந்த ஜென்மாஸ்தனம் ஒரு அழகிய ஆலயமாகவே உருவாகிவிட்டது. ஆலயத்தின் உள்ளே செல்வதற்கு முன் என்னை கண்காணித்து தான் உள்ளேச் செல்ல அனுமதித்தார்கள். உள்ளே புகைப்படம்,தொலைபேசி எடுத்துச் செல்ல மறுக்கப்பட்டது.
முதலில் கிருஷ்ணர் பிறந்த இந்த சிறையின் அறையைப் பார்க்க வேண்டும் என்று மெதுவாக சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். பின்பு, அந்த இடம் மிகவும் குறுகலாக காணப்பட்டது. இந்த ஆலயத்தில் பலகையுடன் கூடிய சிறை போன்ற ஒரு அமைப்பை கண்டேன்.

அந்த பலகையில் தான் கிருஷ்ணர் பிறந்தார் எனக் கூறினர். உலகிலுள்ள மிகப் புனிதமான இடங்களில் தலையாய இடமான இங்குள்ள “கர்பக்ருஹா”(கல்சாவால்)சிறையில் “துவாபர யுகத்தில் மாதாதேவகி,வசுதேவருக்கு 8-வது மகனாக கிருஷ்ணன் பிறந்தார்.
கிருஷ்ணர் பிறந்ததற்கான நோக்கம்,தனது தாய் மாமன் கம்சனைக் கொன்று, அவரின் தீய செயல்களில் இருந்து மக்களை விடுவிப்பதாக நம்பப்படுகிறது.
அதன் அருகில் கிருஷ்ணர் பிறந்த போது நடந்த சம்பவங்கள் எல்லாம் புகைப்பட வடிவில் சுவற்றில் பார்த்தேன் மற்றும் கிருஷ்ணரின் வெவ்வேறு அவதாரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
கிருஷ்ணர் இங்கே பிறந்தது மட்டுமல்ல அவர் ராதையோடு நர்த்தனம் புரிந்தது, கோபியரோடு விளையாடிய தருணங்கள், இவற்றைப் பற்றி அங்கே ஒவ்வொன்றாக ஒருவர் எனக்கு எடுத்துரைத்தார்.
கிருஷ்ணரின் இளமைப் பருவம் கழிந்த இடம்.கிருஷ்ணரை நேரில் பார்க்க மட்டுமே எனது கண்கள் காத்துக் கொண்டிருந்தன. உள்ளேச் சென்ற பிறகு, கிருஷ்ணர் ஆலயத்தின் பிரம்மாண்டமான கட்டிடங்களை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
ஆலயத்தின் அமைதியான சூழல்,கிருஷ்ணரின் பிரசன்னமும் என்னால் நன்கு உணர முடிந்தது.

பிறகு, மதுரா நகரத்தின் தெருக்களில் வண்ணங்கள்,இசை மற்றும் மகிழ்ச்சியான குழப்பம் மற்றும் ராதாவுடன் கிருஷ்ணர் லீலைகள் செய்யும் போது பர்ஸானா பெண்கள் அவர்களை அடிக்க தடி எடுத்து விரட்டுவது வழக்கம். இவையெல்லாம் என் விழியின் முன் அரங்கேறிக் கொண்டிருந்தது .
பிறகு,எங்கிருந்தோ ஒரு உரக்க குரல்கள் செவியில் கேட்டது, என்னவென்றுப் பார்த்த போது,மக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஓரிடத்தை நோக்கி, தனது உரத்த குரலில் “கிருஷ்ண பகவான்க்கி ஜே” என்றுக் கூறினர்.
பின்பு,எனக்குள் மிகப்பெரிய தவிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. “அடேய் என் கிருஷ்ணனே,எங்கே நீ இருக்கிறாய்?” என பெருங்குரலோடு சொல்லிச் சொல்லி அங்கேயே திரிந்துத் தேடி அலைந்துக் கொண்டிருந்தேன்.
அங்கிருப்பவர்கள் என்னை ஒரு வித்தியாசமாகத்தான் பார்த்தார்கள். பின்பு,கிருஷ்ணர் பெரிய கவுன் உடை அணிந்துக் கொண்டு தன் துணையோடு காட்சிக் கொடுத்தார்.மெய்ச் சிலிர்த்துப் போனேன்,கையிலிருக்கும் முடியெல்லாம் தூக்கி நின்றது.
எனது கண்கள்,முகம் பேரானந்த்தத்தில் இருந்தது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் என்னையே மெய் மறந்து கிருஷ்ணரை நோக்கியேப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எனது சிறிய வயதிலிருந்தே எனக்குள் ஒரு அங்கமாகவே இருக்கிறார் கிருஷ்ணர். அவரை நேரில் பார்க்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு புதிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அங்கேயிருந்து விடுபடவே மனது இயலவில்லை. எனது ஒட்டுமொத்த உணர்வுகளும் அந்த ஒரு நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று.
பிறகு, மதுரா நகரத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், மதுரா ஒரு சிறிய ஊர்.
கடைகள் மிக குறைவாகவே காணப்பட்டது.மதுராவின் சாலையோரம் போகும் போது நிறைய பேர் மாடுகள் வளர்ப்பதைப் பார்த்தேன்.
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானது இந்த “மதுரா” நகரம். நான் மதுராவிற்குச் சென்ற பிறகு ஒரு சில புதிய தகவல்களையும் சேகரித்தேன். இங்கே இந்து மதத்தினர் மட்டும் தான் மதிக்கக்கூடும் என நினைத்திருந்தேன்.

ஆனால், இங்கே பெளத்தர்கள் இன்னும் சில மற்றும் பிராமணர்களும் மதிக்கப்படுகிறார்கள் என தெரிந்தது. ஆலயத்திற்குள் ஒரு அருங்காட்சியகத்தைப் பார்த்தேன்.
அதற்குள், இந்த இந்து மதத்தை ஆதரிக்கும் அண்டை பகுதிகளில் தோண்டி எடுக்கப்பட்ட பல பழங்கால சிலைகள், சிற்பங்கள், தங்கம், செம்பு,வெள்ளை நாணயங்கள், டெரகோட்டா வேலைகள்,களிமண் பொருட்கள், பழங்காலத்து மட்பாணங்கள், ஓவியங்கள் இருந்தன.
அவற்றின் மூலமாக மதுரா நகரத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலித்தது. முக்கியமாக “மதுரா” இயற்கை,மதம்,கலாச்சாரம் இவற்றின் கவர்ச்சிக் காரணமாக இந்தியாவிலேயே அதிகமாக பார்வையிடப்படும் இடமாக “மதுரா” அழைக்கப்படுகிறது. பின்பு, மதுராவின் உணவுகளை எல்லாம் ரசித்தேன்.
இனிப்பு சூடான பால்,பேடா எனக்கு மிகவும் பிடித்தது.மநம் சார்ந்த நகரத்தில்,மத மற்றும் புனித பொருட்கள் விற்கும் ஏராளமான கடைகள் இருந்தது.
வளமான பாரம்பரியம்,பழமையான நகரம்,யமுனை ஆற்றின் கரை,மனிதகுலம், இறுக்கமாகப் பிடிக்கப்படாத எதையும் பிடுங்குவதற்குப் பெயர்போன குரங்குகளோடு ஒரு விளையாட்டு,கிருஷ்ண ஜென்மபூமி ஆலயம் மறக்க முடியாத ஒன்று. இந்த நகரத்தில் பல புராணக் கதைகள் இருந்தாலும் இங்கே வந்த பிறகு நிறைய ஆராய்ந்தேன்.

இயற்கையான சுற்றுப்புறங்கள், அடர்ந்த மரங்கள் எல்லாம் மதுராவில் என்னை மிகவும் ஈர்த்தது. மதுராவில் வாழும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.
எந்தவொரு உதவியும், முழுமையான உதவியாக வழங்கப்படுகிறதைக் காண முடிந்தது. முக்கியமாக அனாதைகள்,கைம்பெண்கள், மாற்று திறனாளிகள்,குழந்தை இல்லாதவர்களுக்கு மிகவும் உதவி செய்கிறார்கள். யாரும் எந்தவொரு நச்சு பணத்தை உட்கொள்ளாமல் அந்த நகரத்திலுள்ள ஒவ்வொரு நபரும் விதிகளைப் பின்பற்றி வருவதையெல்லாம் என்னிடம் கூறினார்கள்.

துவாரகாதீஷ் 1800 ஆண்டு பழமையான ஆலயம். கீதா மந்தீர் ஒரு தனித்துவமான ஆலயம், சுவர்களில் பகவத் கீதையின் கல்வெட்டுகள் இருந்தது.
மதுரா நகரத்தின் தெருக்களில் சுற்றித் திரிந்தேன்,முக்கியமாக பழங்கால கட்டிடக்கலை, இடிந்துவிழும் பழைய வீடுகளின் இடிபாடுகள் காண முடிந்தது. இந்த மதுரா உள்ளூர் வாசிகளின் நேசமான அன்பு எனக்கு முழுவதுமாகக் கிடைத்தது.
மதுரா தெருக்களில் இருந்த உணவுகளை ருசித்து ரசித்துத் தீர்த்தேன். முக்கியமாக ஆலு, பூரி, சாட் அனைத்தையும் சுவைத்து உண்டேன். இந்தியாவின் ஏழு புனித நகரங்களில் மதுராவும் ஒன்றாகும்.
மதுராவில் நான் சென்ற இடமெல்லாம் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை நிறைய கொடுத்தது. அங்கே திருவிழாவின் போது மக்களின் பேரார்வம், அன்பு மற்றும் உற்சாகம் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
நான் ஏன் எனது தேசாந்திரி பயணத்தின் போது சாலை வழியைத் தேர்ந்தெடுக்கிறேன் என்றால், என்னைப் பொறுத்தவரை சாலைப் பயணம் என்பது இந்தியாவின் நீளம் மற்றும் அகலத்தில் பயணிக்க மிகவும் மகிழ்ச்சியான வழிகளாக எனக்கு அமைந்தது. எப்பொழுதும் பார்ப்பதற்கும்,அனுபவிப்பதற்கும் ஏதோ ஒன்று இருந்துக் கொண்டே இருக்கிறது.
மனமில்லாமல் மதுராவிலிருந்து விடைப்பெற்றேன் அழகான நினைவுகளை ஒரு புதையலாக எடுத்துக் கொண்டு!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.