கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதல்வர் வேலை இல்லை: எடப்பாடி பழனிசாமி
Travel for Nature Lover: தென்னிந்தியாவில் பார்க்க வேண்டிய 7 முக்கிய சுற்றுலாத் தலங்கள்..!
நம் நாடு பல்வேறு விதமான நிலப்பரப்புகளால் ஆனது, பனி பிரதேசம், பாலைவனம், நதிகள், ஆறுகள், பசுமைமாறாக் காடுகள், மலைகள், சதுப்புநிலக் காடுகள், பீடபூமியும், தீவுக்கூட்டங்கள் என இயற்கையின் அனைத்தும் அம்சங்களும் கொண்டது.
இந்தியர்களாக இவற்றையெல்லாம் பாஸ்போர்ட், விசா செலவீனங்கள் இல்லாமல் சொந்த மக்களாக சுற்றிப்பார்க்கும் பேறு பெற்றவர்கள் நாம். நம் நாட்டின் மக்கள்தொகைக்கு ஏற்ப சுற்றுலாத்தளங்களும் பல இடங்களில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு கூட்ட நெரிசல் இல்லாமல் இயற்கையழகை ரசிக்க விரும்புபவர்களாகத்தான் இந்த பதிவு. தென்னிந்தியாவில் இருக்கும் 10 பிரபலமல்லாத இடங்களின் பட்டியல் இது.
ஒப்பீட்டளவில் மற்ற சுற்றுலாத்தலங்களைவிட இங்கு நெரிசல் குறைவாக இருப்பதுடன், நேச்சர் லவ்வர்களின் புலன்களுக்கும் மனதுக்கும் விருந்தளிப்பவை!
அகஸ்தியர்கூடம் (Agasthiyakoodam)
கேரளாவில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அதிசயங்களில் ஒன்று அகஸ்தியர் கூடம். இது தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிகரமாகும். இதில் அடர்ந்த காட்டுக்கு இடையில் மலையேற்றம் செய்யலாம். இந்தக் காட்டில் பனி அடர்ந்திருந்தாலும் பறவைகளைப் பார்வையிட விரும்புகிறவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத இடமாக இதுத் திகழும். குறிப்பாக அரியவகை பறவையான மலபார் சாம்பல் இருவாச்சி பறவைகளை இங்குக் காணலாம். அமைதியான அதே வேளையில் சாகசங்களை வழங்கக் கூடிய இந்த இடம் நேச்சர் லவ்வர்களுக்கு சொர்கம் என்றேக் கூறலாம்.
ஹம்பி (Hampi)
ஹம்பி ஒரு வரலாற்றுத் தளமாக மட்டுமே நமக்குத் தெரியும். வரலாற்றுச் சிதைவுகளைப் பார்வையிடும் பாறைகள், அங்கே வளைந்து ஓடும் துங்கபத்ரா ஆறு, அதனால் விளையும் நீண்ட நெல் வயல்கள் என கண்களுக்கு விருந்தளிக்கக் கூடிய இடம் ஹம்பி. யுனெஸ்கோவின் பாரம்பரிய தளங்கள் அங்கீகாரத்தைப் பெற்ற இந்த ஊர், சுற்றுலா விரும்பிகள் மிஸ் செய்யக் கூடாத ஒன்று.
மேகமலை (Megamalai)
காடுகள், டீ எஸ்டேட்டுகள், ஏரிகள் இடையே இந்த குளிர்காலத்தில் சில நாட்களை கழிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வு மேகமலை. இங்கிருக்கும் அடர்ந்த காடுகளில் யானைகள், சிறுத்தைகள் மற்றும் சில அரிய பறவைகளையும் காண முடியுமென்பதால் வன விலங்கு ஆர்வலர்களுக்கும் இது உவப்பான சுற்றுலாத் தலம்.
கபினி (Kabini)
கர்நாடக மாநிலம் நாகர்ஹோலே தேசிய பூங்காவிற்கு உட்பட்டது கபினி வனப்பகுதி. இங்குப் புலி, கரடி எல்லாம் இருந்தாலும் பாதுகாப்பாகச் சென்று வர முடியும். இங்கு ரொமான்டிக்கான ரெஸார்ட்களும் இருக்கின்றன. இயற்கை அழகை ரசித்தவாறு காட்டுப்பகுதிக்குள் நடைப்பயணம் செல்வது மனதுக்கு இடமளிக்கும். ஆற்றுக்கரை, அணைக்கட்டு என்று சுற்றிப்பார்க்கவும் இங்குப் பல இடங்கள் உள்ளது.
வயநாடு (Wayanad)
வயநாடு சமீபத்தில்தான் நிலச்சரிவு ஏற்பட்டு மீண்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டது வயநாட்டின் குறிபிட்ட சில கிராமங்களையே பாதித்திருக்கிறது. அதனால் சுற்றுலாப்பயணிகள் தாராளமாக மீதமிருக்கும் இடங்களுக்குச் சென்றுப் பார்வையிடலாம்.
இங்குள்ள மலைகள், நீர்வீழ்ச்சிகள், வன உயிரினங்கள் இயற்கையின் மடியில் தவழ விரும்புபவர்களை அள்ளி அணைக்கின்றன. மலையேற்றங்கள், குகைகள், ஜிப் லைன் என சாகச விரும்பிகளுக்கும் இங்கு சில இடங்கள் இருக்கின்றன.
அன்ஷி தேசிய பூங்கா (Anshi National Park
அன்ஷி தேசியப்பூங்கா சுற்றுலாப்பயணிகள் குவியாத வனப்பகுதியாகும். மேற்கு தொடர்சி மலையின் அழகை கண்டுவியக்க இந்த இடம் சரியான தேர்வு. இது புலிகள் வாழும் பகுதியும் கூட. புலி மட்டுமல்லாமல் யானைகள், சிங்கவால் குரங்குகளையும் இங்கு காணலாம். மரங்களால் மூடப்பட்ட காட்டுக்குள் சில்லென்ற நீர்வீழ்ச்சியில் நீராடுவதை விட ஒரு நேச்சர் லவ்வருக்கு வேறென்ன கனவிருக்க முடியும்?
வர்கலா (Varkala)
வர்கலா பெரும் பாறைகளும் பரந்த கடற்கரையும் சந்திக்கும் ஓர் அழகிய புள்ளி. அரேபிய கடற்கரையும் அமைதியான சூழலும் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்று தாளாட்டும் வல்லமை கொண்டவை. நெரிசலும் இல்லாமல் சாகச, வீர விளையாட்டுக்களும் இல்லாமல் ரிலாக்ஸாக சென்றுவர இது சிறந்த இடம். நீங்கள் ஒரு பீச் லவ்வராக இருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb