செய்திகள் :

Trump: ``இந்தியா அதிக வரி விதிக்கிறது; நாங்களும் அப்படிச் செய்தால்..." - இந்தியாவை சாடிய டிரம்ப்!

post image

வரும் ஜனவரி மாதம், டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவர் அதிபராக பதவியேற்றப் பிறகு, அவரிடம் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை மற்றும் அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த திங்கள்கிழமை நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், "பரஸ்பரம் என்ற சொல் மிக முக்கியமானது. இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிக்கின்றது. இந்தியா அமெரிக்காவுக்கு 100 சதவிகித வரி விதித்தால், நாமும் அதுப்போல செய்கிறோமா?

சைக்கிளில் அனுப்புகிறார்கள்...

அவர்கள் சைக்கிளில் அனுப்புகிறார்கள். அதற்கு சைக்கிளையே நாம் அனுப்புகிறோம். அவர்கள் 100 மற்றும் 200 சதவிகிதம் வரி விதிக்கிறார்கள். இந்தியாவும், பிரேசிலும் அதிக வரியை விதிக்கிறது. அவர்கள் இப்படி நமக்கு அதிக வரியை விதிக்க வேண்டுமானால், விதிக்கட்டும். நாமும் அதே மாதிரியான வரியை விதிக்கப்போகிறோம்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு: `ஐ.பி.எஸ் அதிகாரி'களான 26 எஸ்.பி-க்கள் - நியமன உத்தரவு பிறப்பித்த மத்திய அரசு!

தமிழக காவல்துறையில் டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு மூலம் நேரடி டி.எஸ்.பி-க்கள் நியமிக்கப்படுவதுண்டு. இவர்கள் எஸ்.பி-யாக பதவி உயர்வு பெற்ற பிறகு ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்கப்படும். கடந்த 5 ஆண்டுகளாக ஐ.... மேலும் பார்க்க

தூத்துக்குடி: T.சவேரியார்புரத்தில் தேங்கும் குப்பைகள்... சுகாதார பாதிப்புகளைத் தடுக்குமா மாநகராட்சி?

தூத்துக்குடி மாவட்டம், T. சவேரியார்புரம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் அமைந்திருக்கிறது. அதன் பின்புறம் பிரதான சாலைக்கு அருகே குடியிருப்புகளையொட்டி ஆங்காங்கே குவிந்து கிடைக்கும் குப்பைகளால் அந்த இ... மேலும் பார்க்க

CLEAN KEERANATHAM: `உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' - தேசிய அளவில் விருதுபெற்ற கீரணத்தம்

கோவை மாவட்டம், சரவணம்பட்டி அருகில் உள்ள கீரணத்தம் ஊராட்சி 'நாட்டிலேயே உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்ற ஊராட்சி' என்ற விருதுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விருத... மேலும் பார்க்க

Pan 2.0 - `பழைய பான் கார்டை கட்டாயமாக மாற்ற அவசியமில்லை' - என்ன சொல்கிறது அரசு?!

ஒரு திட்டம் புதியதாக வந்தால், உடனே அது சம்பந்தமான மோசடியும் முளைத்து விடுவது லேட்டஸ்ட் டிரண்ட் ஆக உள்ளது. பான் 2.0 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக ஆகவில்லை. அதற்குள், அத... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: இடிந்த விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்; முகாமிடும் சமூக விரோதிகள்- சீரமைக்க கோரும் மக்கள்

திருப்பத்தூர் அடுத்த மடவாளத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியின் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு 45 ஆண்டுகளுக்குமேல் ஆகிறத... மேலும் பார்க்க

திருவொற்றியூர்: அம்மா உணவகத்துக்கு சீல்; போராட்டத்தில் இறங்கிய அதிமுக-வினர்! - என்ன நடந்தது?

சென்னையில் உள்ள திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு அருகே அமைந்திருந்த அம்மா உணவகக் கட்டடம், கடந்த திங்கள்கிழமை மாநகராட்சி அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பேசுபொருளாகியிருக்கிறது.ச... மேலும் பார்க்க