Trump Vs Zelensky: `அவமரியாதை செய்து விட்டார்' - கொதிக்கும் டிரம்ப்; நன்றி சொல்லும் ஜெலென்ஸ்கி..
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி - இருவருக்கும் இடையே நடந்த முடிந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் தங்களது எக்ஸ் பக்கத்தில் அந்தப் பேச்சுவார்த்தை குறித்து பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "இன்று வெள்ளை மாளிகையில் மிக அர்த்தமுள்ள சந்திப்பு நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் தெரிந்துக்கொண்ட முக்கியமான ஒன்று, ஒரு அழுத்தமான சூழலில் பேச்சுவார்த்தை இல்லாமல் எதுவும் புரிந்துகொள்ள முடியாது. இந்த பேச்சுவார்த்தை மூலம் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதிக்கு தயாராக இல்லை என்பதை தெரிந்துகொண்டேன். அமெரிக்கா அவர் பக்கம் இருந்தால், பேச்சுவார்த்தையில் அது அவருக்கு மிகப்பெரிய நன்மையை பயக்கும் என்று நினைக்கிறார். ஆனால், எனக்கோ நன்மைகள் வேண்டாம். அமைதி வேண்டும்.
“We had a very meaningful meeting in the White House today. Much was learned that could never be understood without conversation under such fire and pressure. It’s amazing what comes out through emotion, and I have determined that President Zelenskyy is not ready for Peace if… pic.twitter.com/CtnqXBNcW3
— President Donald J. Trump (@POTUS) February 28, 2025
ஓவல் அலுவலகத்தில் அவர் அமெரிக்காவை அவமரியாதை செய்துவிட்டார். அவர் அமைதிக்கு தயாராகும்போது இங்கே திரும்ப வரலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அந்த அத்தனை ஆதரவுகளுக்கு நன்றி தெரிவித்து வருகிறார் ஜெலன்ஸ்கி.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
