செய்திகள் :

Trump wall Explained: ``175 ஆண்டுகாலப் பிரச்னை" - ட்ரம்ப் சுவரின் வரலாறும்... பின்னணியும்!

post image
அமெரிக்காவின் 47-வது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் முதல் நாளிலேயே குடியேற்றம் முதல் காலநிலை மாற்றம் வரை ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதில் கூடுதல் கவனம் பெற்ற செய்திகளில் ஒன்று குடியேற்றம்.

அதற்காக நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவிலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அமெரிக்காவில் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்கு இயல்பாக வழங்கப்படும் அமெரிக்கக் குடியுரிமைக்கு எதிராகவும், மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் கையெழுத்திட்டிருக்கிறார்.

Trump wall

கையெழுத்திடும்போதே "இது பெரிய நடவடிக்கை" எனக் கூறி அதை முக்கியத்துவப்படுத்தியும் காண்பித்திருக்கிறார். அமெரிக்க எல்லையை மூடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்டவர், ``இனி சட்டவிரோத போதைப்பொருள்கள் நாட்டுக்குள் நுழைவதையும், மனிதக் கடத்தல், எல்லை தாண்டிய குற்றங்கள் போன்றவற்றை இல்லாமலாக்க வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தெற்கு எல்லைப்பகுதியில் கூடுதலாக சுவர் (ட்ரம்ப் சுவர்) அமைப்பதற்கான முயற்சிகளை மீண்டும் மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருக்கிறார். இப்படி சட்டவிரோத குடியேற்றத்துக்குத் தடைவிதிக்கும் அவரின் நடவடிக்கைகள் பெருமளவில் பேசுபொருளாகியிருக்கிறது. இதில் கூடுதல் கவனம் பெற்றது 'ட்ரம்ப் சுவர்'. இந்த சுவருக்கென தனி வரலாறே இருக்கிறது. அதைப் பார்க்கலாமா....

டெக்ஸாசை அமெரிக்கா தன்னுடன் இணைத்துக்கொண்டதற்கு எதிராக 1846 - 1848 வரை மெக்சிகோ அமெரிக்காவுடன் போரில் ஈடுபட்டது. இந்தப் போரில் அமெரிக்கா வெற்றிபெற்றது. அப்போது முதலே, அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப் பிரச்னை தொடங்கியது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இந்த இருநாடுகளின் எல்லைகளும் ரோந்துப்பணிகள்கூட இன்றி திறந்திருந்தது. 1910-ல் நடந்த மெக்‌சிகன் புரட்சி, முதலாம் உலகப் போர் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவுக்கும் - மெக்சிகோவுக்கும் இடையே மீண்டும் பதற்றம் தொடங்கியது. அப்போதுதான் ஆயுதக் கடத்தல், அகதிகள் பிரச்னை, உளவுத்துறை சிக்கல்கள் போன்ற காரணங்களுக்காக எல்லைப் பகுதிகளில் இருநாடுகளும் ரோந்துப்பணிக்கான காவலர்களை நியமித்திருக்கின்றன.

அமெரிக்கா - மெக்சிகோ

அதே காலகட்டத்தில்தான் அமெரிக்கா - மெக்சிகோவுக்கு நடுவில் இருக்கும் ஆறை இணைக்கும் Brownsville & Matamoros பாலம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கும் வந்தது.

அதுவரை எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்த நிலையில், 1909 - 1911-க்கு மத்தியில் கால்நடைகள் எல்லைத்தாண்டுவதைத் தடுக்க, இரு நாட்டுக்கு மத்தியில் முதன்முதலாக ஆம்போஸ் நோகேல்ஸில் பகுதியில் முள்வேலி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த முள்வேலி 1929-ல் அது மனித நடமாட்டத்தைத் தடுக்கும் 6 அடி உயரச் சங்கிலி - இணைப்பு வேலியாக மாற்றப்பட்டது. அது அப்படியே காலப்போக்கில் 6 அடி முள்வேலியாக உருமாறியது.

இரண்டாம் உலகப்போர் (1939 - 1945) நடந்த 1940, 1950-களில் மெக்சிகோ - அமெரிக்காவின் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெயரத் தொடங்கினர். இந்த தருணத்தில், மெக்சிகோவும், அமெரிக்காவும் எல்லை ஊடுருவலை ஏற்றுக்கொண்டன. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைக் களைய, பிரேசரோ திட்டம் என அழைக்கப்படும் 'தொழிலாளி விருந்தினர் திட்டம்' கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தை இருநாடுகளும் ஏற்றுக்கொண்டன. நாட்டுக்குள் வரும் அனைவரும் இந்த திட்டத்துக்குத் தகுதி பெறவில்லை என்றாலும், இதைக் காரணமாக வைத்து ஆயிரக்கணக்கானோர் சுதந்திரமாக இடம்பெயரத் தொடங்கினர்.

இரண்டாம் உலகப் போர்

பிரேசரோ திட்டம் 1964-ல் முடிவடைந்தது. எனவே, மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் இருநாடுகளுக்கும் ஏற்பட்டது. அதற்காக அப்போதைய அமெரிக்காவின் ரூஸ்வெல்ட் அரசு நகர்ப்புறங்களில் வேலி அமைக்கத் திட்டமிட்டது. அதற்கு அடுத்த வருடம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த துணைக் குடியரசுத் தலைவர் லிண்டன் பி. ஜான்சன் குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் கையெழுத்திட்டார். இதுதான் அமெரிக்காவின் முதல் குடியுரிமைச் சட்டமாகும். இதன்மூலம் அமெரிக்காவிற்குக் குடிபெயரும் நபர்களின் எண்ணிக்கை வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர்கள் ரிச்சர்ட் நிக்சன் (1969 - 1974) தொடங்கி ஜார்ஜ் HW புஷ், பில் கிளின்டன் எனத் தொடர்ந்து இந்தத் தடுப்பு, முள்வேலிகளை அமைத்தும், கண்காணித்தும் வந்தனர்.

மெக்சிகோவிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் அதிகளவில் அமெரிக்காவுக்குள் நுழைவதாகவும், போதைப்பொருள்கள் அதிகம் அமெரிக்காவுக்குள் கடத்திவரப்படுவதாகவும் அப்போதைய பாரக் ஒபாமா அரசு (2012 - 2016) மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தது. 2016-ம் ஆண்டு இதை அரசியல் ஓட்டாக மாற்றும் யுக்தியைக் கையில் எடுத்தார் டொனால்ட் ட்ரம்ப். அதிபர் வேட்பாளரான அவர், அப்போதைய தேர்தல் பிரசாரங்களில், 'நான் அதிபரானால், அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் ஒரு பெரும் தடுப்புச் சுவர் அமைப்பேன். புலம்பெயர்பவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவேன்' எனத் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலின் போதே இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் அவர்தான் ஆட்சியை வென்று அமெரிக்க அதிபரானார்.

ட்ரம்ப் சுவர்

2017-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற ட்ரம்ப், அமெரிக்கா - மெக்சிகோ எல்லை சுவருக்கு 12 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனத் திட்டமிட்டு நிதி ஒதுக்கினார். ஆனால் மொத்த மதிப்பீடுகள் 300 பில்லியன் டாலர்களாகக் குறிக்கப்பட்டது. அதேநேரம், பல ஆண்டுகளாக ஜார்ஜ் HW புஷ்ஷும், பாரக் ஒபாமாவும் கட்டிக் காத்துவந்த மெக்சிகோவின் உறவை டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த சுவர் அமைக்கும் திட்டம் பெரும் ஆபத்தில் ஆழ்த்தியது. மேலும், ``இந்தச் சுவர் வனவிலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பல அழிந்து வரும் உயிரினங்களும், அவற்றின் வாழ்விடங்களும் கபளீகரம் செய்யப்படுகின்றன.

காடுகளின் உற்பத்தி போன்ற பல இயற்கை சூழல்கள் சீர்குலைக்கப்டுகிறது" எனச் சூழலியல் ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்தச் சுவர் கட்டுமானத்துக்கான நிதியுதவியும் பல வழக்குகளுக்கு இலக்காகியது. இத்தனை விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் தாண்டி, அவரது முந்தைய ஆட்சிக் காலத்தில் தெற்கு எல்லையில் தடுப்புச் சுவர் பணிகள் தொடங்கி நடந்து வந்தது.

ட்ரம்ப் அரசுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த பைடன் அரசு, இந்தச் சுவர் கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. அப்போதுவரை எவ்வளவு நீளச் சுவர் அமைக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்தன. அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கிய இறுதிப் புள்ளிவிவர அறிக்கையின்படி, ட்ரம்ப் சுவர் 458 மைல்கள் அமைக்கப்பட்டிருந்ததாகச் செய்திகளில் தகவல் வெளியானது.

ட்ரம்ப் சுவர்

இந்தச் சுவர் கான்கிரீட்டில் 18 முதல் 30 அடி எஃகு பொல்லார்டுகளை நங்கூரமிடப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்துக்கு இடைவெளியில் சென்சார்கள், விளக்குகள், கேமராக்கள் பரிசோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பைடன் அரசு இடை நிறுத்தத்தால் முழுமையாக முடியாத இந்த சுவர் அமைக்கும் பணியை, தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தொடங்க உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான எந்த திட்டத்தையும் இன்னும் வகுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 179 ஆண்டுகளாக தொடரும் இந்த அரசியல் பிரச்னைக்கு மத்தியில், பெரும் சிக்கல்களுக்கு பலியாவது என்னவோ இருநாட்டு மக்கள்தான்!

Union Budget: "வரி பயங்கரவாதம்... பாதிக்கும் நடுத்தர வர்க்கம்" - கெஜ்ரிவாலின் 7 பரிந்துரைகள் என்ன?

2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. மறுபக்கம், டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி சட்டமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நில... மேலும் பார்க்க

``அப்போது ரெய்டுக்கு பயந்து பதுங்கியிருந்தாரா பழனிசாமி?" - ஐ.பெரியசாமி

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள்களாகவும், 300 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும் என திமுக வாக்குறுதி அளித்து நிறைவேற்றவில்லை என அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அ... மேலும் பார்க்க

Stalin : 'இந்தியாவின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்படும்!' - ஸ்டாலின் சொல்வதென்ன?

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் இரும்பின் தொன்மை நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மேலும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்திற்கு அடிக்கல... மேலும் பார்க்க

இரும்புக் காலம் :`தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பே..!’ - ஸ்டாலின் சொன்ன முக்கிய அறிவிப்பு

`நாளை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளேன்’ என முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜனவரி 22) தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இது குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. ‘இரும்பின் தொன்மை’ ந... மேலும் பார்க்க

கழுகார் : `வாரிசு அம்மணியின் வருகை; ரசிக்காத உ.பி-கள் டு சூரியக் கட்சியைக் கரைக்கும் மூவர்!’

குஷி மூடில் எடக்கானவர்!சூரியக் கட்சியைக் கரைக்கும் மூவர்...மாங்கனி மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதற்காகவே, அங்கிருக்கும் ஒரே ஒரு மக்கள் பிரதிநிதியான ‘ராஜ’ பிரமுகருக்கு, மாண்புமிகு அந்தஸ்தை வழங்கியது ஆட்... மேலும் பார்க்க

`கடன்களால் கலங்கி நிற்கிறதா தமிழகம்?' - இபிஎஸ் சாடலும் திமுகவின் பதிலும்

எடப்பாடி சொல்லும் குற்றச்சாட்டு!சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில், கலால் வரி, முத்திரைத்தாள் விற்பனை, ஜிஎஸ்டி வருவாய... மேலும் பார்க்க