திருப்தியான ஏலம்: 6ஆவது கோப்பையை வெல்வோம்..! ஆகாஷ் அம்பானி நம்பிக்கை!
TVK: `விஜய் கட்சியில் இணைகிறாரா நாஞ்சில் சம்பத்?' - பரவிய தகவலும் விளக்கமும்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணக்காவிளையைச் சேர்ந்தவர் பேச்சாளர் நாஞ்சில் சம்பத். ம.தி.மு.க நட்சத்திர பேச்சாளராக பிரபலமான நாஞ்சில் சம்பத் பின்னர் அ.தி.மு.க-வுக்குச் சென்றார். தொடர்ந்து அ.ம.மு.க-வுக்கு தாவினார். அதன்பின்னர் தி.மு.க-வுக்கு ஆதரவாக கட்சி மேடைகளில் பேசிவந்தார். இலக்கிய மேடைகளிலும் பேசிவந்த நாஞ்சில் சம்பத்தை சமீப காலமாக பெரிய அளவில் தி.மு.க ஆதரவு கூட்டங்களில் காண முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 5 அரசியல் பிரபலங்கள் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாகவும், அந்த லிஸ்டில் நாஞ்சில் சம்பத்தின் பெயரும் உள்ளதாக தகவல்கள் தடதடக்கின்றன.
2026 சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இருந்தால் பக்கபலமாக இருக்கும் என விஜய்யிடம் சிலர் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். விஜய் ஓகே சொன்னதால் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடந்தததாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் சில சினிமா பணிகள் நிறைவடைந்த பிறகு 2025 ஏப்ரல் அல்லது மே மாதம் வாக்கில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் விஜய்யை சந்தித்து த.வெ.க-வில் இணைய திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்வல்கள் கசிந்துவருகின்றன.
விஜய் கட்சியில் இணைவதாக வெளியான தகவல் குறித்து நாஞ்சில் சம்பத்திடம் கேட்டோம், "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. அதெல்லாம் நமக்கு ஒத்து வராது. நமக்கு அப்படி ஸ்டாண்ட் எடுக்கும் எண்ணம் இல்லை. நான் ஒரு கட்சியிலும் சேராமல் ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்சம்நாள் ஓட்டிவிட்டுபோகவேண்டியதுதான். விஜயின் பெர்ஃபாமென்ஸை பார்த்துதான் அவரது அரசியல் ஜெயிக்குமா எனச்சொல்ல முடியும். அது போகப்போகத்தான் தெரியும். ஆனால், இளைஞர்கள், பெண்கள், தாய்மார்கள் எல்லாம் விஜய்க்கு ஆதரவாக உள்ளனர்" என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...