செய்திகள் :

Union Budget 2025: `இன்னும் 6 நாட்களே...' - மத்திய பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?!

post image

இன்னும் ஆறு நாட்களில் இந்தாண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவருக்கு எட்டாவது பட்ஜெட் ஆகும்.

பணவீக்கம் அதிகரிப்பு, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மக்களின் வாங்கும் திறன் குறைவு போன்றவை நிலவும் இந்தச் சூழலில் தற்போது தாக்கல் ஆகும் பட்ஜெட் அதிகம் கவனம் பெருகிறது. மேலும், மக்கள் அதிக எதிர்பார்ப்புகளோடு இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கியுள்ளனர். அவை என்னென்னெ என்பதைப் பார்க்கலாம்...

ஜவுளித்துறை உள்ளிட்ட துறைகளில் சில மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அவற்றை இறக்குமதி செய்யும்போது அதிக இறக்குமதி வரி கட்ட வேண்டியதாக உள்ளது. அதனால், இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டும்.

ஜவுளித்துறை உள்ளிட்ட துறைகளில்...

வேலையில்லா திண்டாட்டம்

தற்போது நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தைக் குறைக்க இந்தியாவில் உற்பத்தித் துறையை இன்னும் விரிவுப்படுத்த வேண்டும். உருவாக்க வேண்டும். மேலும், இது இந்தியாவை 2027-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருமாற உதவும்.

வருமான வரி உள்ளிட்ட வரிகளைக் குறைக்கவேண்டும் மற்றும் அவற்றை எளிமைப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுகளை செய்ய வரிகளை குறைக்க வேண்டும்... சலுகைகள் கொடுக்கவேண்டும் மற்றும் அவர்கள் இங்கே முதலீடுகளை செய்வதற்காக சட்டத்திட்டங்களின் கால அளவை குறைக்கவேண்டும்.

இந்தத் துறைகளில்...

விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்கள், மருத்துவம், காப்பீடு போன்ற துறைகளில் மக்களுக்கு ஏற்ற வகையில் முக்கிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

உலகமே எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கிச் செல்லும் இந்த நேரத்தில், தாக்கலாக இருக்கும் பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் வேண்டும்.

ஒரு பக்கம் டிஜிட்டல் துறை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வந்தாலும், இன்னொரு பக்கம் அதே வேகத்தில் டிஜிட்டல் துறையில் மோசடிகள் நடந்து வருகின்றன. இவை இரண்டிற்கான அறிவிப்பும் கொண்டு வரவேண்டும். அதாவது டிஜிட்டல் துறையில் இந்தியாவை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும். இன்னொன்று மோசடிகளை தடுப்பதற்கான சட்டதிட்டங்கள் கொண்டு வரவேண்டும்.

gold
'தாறுமாறு' தங்கம் விலை!

'தாறுமாறு' தங்கம் விலை!

வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பைக் கூட்ட, இன்னும் அதிகரிக்க அவர்களுக்கான நலத்திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

நடுத்தர மக்களுக்கு வரிச் சலுகையில் இருந்து வாழ்வாதார மேம்பாடு வரை பல திட்டங்கள் கொண்டுவர வேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக எகிறிக்கொண்டிருக்கும் இந்த வேலையில், அவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் அவற்றின் விலை குறையும்.

ஸ்டார்ட் அப்கள்...

ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் மக்களின் நுகர்வு ஓரளவுக்கு அதிகரிக்கப்படும்.

கிராமப்புறங்களை மேம்படுத்த திட்டங்கள் கொண்டு வரவேண்டும்.

இன்று பல ஸ்டார்ட் அப்கள் புதிது புதிதாக உருவாகிவருகின்றன. இவை இந்திய பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்களிப்பை அளித்துவருகின்றன. அதை இன்னும் ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட்ட `சாம்சங் தொழிற்சங்கம்' - வரவேற்று மகிழும் தொழிலாளர்கள்!

‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங்இந்தியா எலெக்ட்... மேலும் பார்க்க

Global Hyperloop Competition: ஆசியாவில் முதன்முறையாக சென்னையில் ஹைப்பர்லூப் போட்டி; எங்கு? எப்போது?

சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம்(ஐஐடி மெட்ராஸ்), ஆசியாவிலேயே முதன்முறையாகச் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியைப் பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடத்துகிறது.ஐஐடிசென்னை, ஐஐடிஎம் பிரவர்... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு: `பாதிக்கப்பட்ட மாணவியைக் குற்றம்சாட்டுவதா?' - உச்ச நீதிமன்றம் காட்டம்

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வழக்கில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எஃப்.ஐ.ஆர் (FIR) இணையத்தில்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: அபாயகர மருத்துவக் கழிவுகள்; துர்நாற்றம் வீசும் இறைச்சிக் கழிவுகள் - பாழாகும் பாலாறு!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் அருகே உள்ள பாலாற்றில் கடந்த சில மாதங்களாக மருத்துவக் கழிவுகள், பிராய்லர் கழிவுகள், குப்பைகள் கொட்டி பாலாறு பாழாகி துர்நாற்றம் வீசி சுகாதார சீ... மேலும் பார்க்க

சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா... காவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் | Photo Album

சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்நீதிமன்றத்தில் குடியரசு தின விழா (Madras High Court)சென்னை உயர்... மேலும் பார்க்க

`பெரியார் தமிழகத்தின் கலங்கரை விளக்கம்; தற்குறிகள்தான் அவரை விமர்சிப்பார்கள்' - துரை வைகோ காட்டம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து மதிமுக-வின் முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் பேசுகையில... மேலும் பார்க்க