செய்திகள் :

UP: உயிரோடுள்ள மனைவிக்கு ஈமக்காரியம் செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கணவன்; மனைவி போலீஸில் புகார்

post image

உத்தரப்பிரதேசத்தில் மனைவி உயிரோடு இருக்கும்போது தனது காதலியைத் திருமணம் செய்வதற்காக மனைவி இறந்துவிட்டதாக ஒருவர் நாடகம் ஆடியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள தலகிராம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பவானி சராய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் பட்டேல். இவருக்கு ஏற்கனவே பூஜா என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். மனைவியைக் கைவிட்டுவிட்டு தனது இரண்டு குழந்தைகளை மட்டும் பவன் பட்டேல் தன்னுடன் அழைத்து சென்று வாழ்ந்து வந்தார். பவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அப்பெண்ணைத் திருமணம் செய்வதற்காக மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

சடங்குகள்

இதையடுத்து பவன் மனைவி பூனா தனது குழந்தைகள் இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு கான்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அதேசமயம் பவன் பட்டேல் தனது மனைவி இறந்துவிட்டதாகக் கூறி அதற்கான ஈமக்காரியங்களைச் செய்திருக்கிறார். மேலும், தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டதோடு தனது மனைவியிடம் இருந்த இரண்டு குழந்தைகளையும் கடத்திக்கொண்டு வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார். இது குறித்து பவன் பட்டேல் மனைவி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில்...

தான் உயிரோடு இருக்கும் போது இறந்துவிட்டதாகக் கூறி சடங்குகள் செய்து மரணத்தைச் சட்டப்பூர்வமாக்க முயல்வதாகவும், தனது குழந்தைகளைக் கடத்திச் சென்றதோடு தன்னை அனாதையாக விட்டுவிட்டதாகவும் காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் வீட்டிற்கு வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்து வாழ்ந்தார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எனது பெற்றோர் வீட்டில் சென்று வசித்து வந்தேன். ஆனால் நான் இறந்துவிட்டதாகக் கூறி எனது கணவர் 13வது நாள் காரியத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் .

சடங்குகள்

எனது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து சடங்குகள் செய்துள்ளார். அதற்குத் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துள்ளார். இந்த நிகழ்வைத் தனது சோசியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார். எனது மரணத்தை உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை முறைப்படி திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். என்னிடம் இருந்த குழந்தைகளையும் கடத்திச்சென்றுவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Adani: "இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற லஞ்சம்" - அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் புகார்

தொழிலதிபர் கெளதம் அதானி மீது அடிக்கடி புகார்கள் வந்தாலும் அவை ஓரிரு நாளில் காணாமல் போய்விடுவது வழக்கமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி அதானி மீது புகார்கள் கூறினாலும் அவை எடு... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 3: 1999-லேயே Elon Musk-க்கின் கனவுக்கு உயிர் கொடுத்த `X.com’

1990களின் மத்தியிலேயே இமெயில் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகிவிட்டது என்றாலும், அத்தனை பிரபலமாகவில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த இன்டராக் (Interac) என்கிற நிறுவனம் மெயில் மூலம் பணப்ப... மேலும் பார்க்க

திருமண ஊர்வலத்தில் பொழிந்த `பண' மழை... ரூ.20 லட்சத்தை முண்டியடித்துக் கொண்டு அள்ளிச் சென்ற மக்கள்!

ஒவ்வொருவரும் விதவிதமாக திருமணத்தை நடத்துவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு அனைவராலும் பேசப்படும் ஒரு திருமணமாகவும் மாறி இருக்கிறது. அந்த... மேலும் பார்க்க

ரூ.15 கோடி பட்டுவாடா? - வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.5 கோடி கொண்டுவந்தாரா பாஜக தலைவர்?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர பிரசாரம் செய்ததோடு அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக... மேலும் பார்க்க

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் குறிப்பிட்ட `சமரச மையம்’ என்றால் என்ன?

நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்ததே. முதலில் ஜெயம் ரவி தாங்கள் பிரிந்து வாழ்வதாக அறிவிக்க, 'அது என்னுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவல்ல. என்னால் அவரைத் தொடர்ப... மேலும் பார்க்க

சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்; சிக்கன் ரைஸ்தான் காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கோவையைச் சேர்ந்த எலினா லாரெட் என்ற 15 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து ப... மேலும் பார்க்க