செய்திகள் :

Usain Bolt: "கனவு நிறைவேறிவிட்டது" - உசைன் போல்ட்டைச் சந்தித்த இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்

post image

ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் சர்வதேச தடகள வீரர் உசைன் போல்ட்டை நேரில் சந்திருக்கிறார்.

இதுதொடர்பாக ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சில தருணங்கள் நம் வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும்.

என்னை உட்பட பல மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் உசைன் போல்ட்டைச் சந்திப்பது என்னுடைய கனவாகும்.

ஸ்ரீஜேஷ் - உசைன் போல்ட்
ஸ்ரீஜேஷ் - உசைன் போல்ட்

அந்த கனவு நிறைவேறிவிட்டது. எப்போதும் உசைன் போல்ட் என் இதயத்தில் இருப்பார்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் தடகள வீரர் உசைன் போல்ட்.

100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள இவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்தவர்.

100 மீட்டரை வெறும் 9.58 நொடிகளில் கடந்து அசத்தியவர். 'மின்னல் வேக மனிதன்' என்று அழைக்கப்பட்ட உசைன் போல்ட் 2017ல் சர்வதேச தடகள போட்டிகளிலிருந்து விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: மைதானத்திற்குள் நுழைந்து கென்ய அதிகாரியைக் கடித்த தெருநாய்

டெல்லியில் ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2025 போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. இதற்காக 2,200-க்கும் மேற்பட்ட சர்வதேச பாரா தடகள வீரர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை தந்திர... மேலும் பார்க்க

Ind vs Pak: மீண்டும் நேருக்கு நேர் மோதும் இந்தியா, பாகிஸ்தான்; SKY & Co கைகுலுக்குமா, அவமதிக்குமா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியிருக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. சூர்யகுமார் ... மேலும் பார்க்க

Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேற்றம்; நடந்தது என்ன?

உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இற... மேலும் பார்க்க

'படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது'- உலக சாதனைப் படைத்த உசைன் போல்ட் வருத்தம்

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனைப் படைத்த உசைன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்... மேலும் பார்க்க

ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம்; சாதனை படைத்து அசத்திய தமிழக வீரர்!

சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரரான ஆனந்த குமார் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் ... மேலும் பார்க்க

கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?

'இந்தியா vs பாகிஸ்தான்'ஆசியக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.India vs... மேலும் பார்க்க