'Drone-கள் விமானப்படையின் எதிர்காலமா?' - எலான் மஸ்கின் கருத்திற்கு இந்திய விமானப...
Usain Bolt: "கனவு நிறைவேறிவிட்டது" - உசைன் போல்ட்டைச் சந்தித்த இந்திய ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ்
ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் சர்வதேச தடகள வீரர் உசைன் போல்ட்டை நேரில் சந்திருக்கிறார்.
இதுதொடர்பாக ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "சில தருணங்கள் நம் வாழ்வில் என்றும் நிலைத்து நிற்கும்.
என்னை உட்பட பல மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் உசைன் போல்ட்டைச் சந்திப்பது என்னுடைய கனவாகும்.

அந்த கனவு நிறைவேறிவிட்டது. எப்போதும் உசைன் போல்ட் என் இதயத்தில் இருப்பார்" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தவர் தடகள வீரர் உசைன் போல்ட்.
100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்துள்ள இவர், ஒலிம்பிக் போட்டிகளில் மட்டும் 8 தங்கம் வென்று உலக சாதனை படைத்தவர்.
100 மீட்டரை வெறும் 9.58 நொடிகளில் கடந்து அசத்தியவர். 'மின்னல் வேக மனிதன்' என்று அழைக்கப்பட்ட உசைன் போல்ட் 2017ல் சர்வதேச தடகள போட்டிகளிலிருந்து விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.